tamilnadu

கடை வீதியை அடைக்க எதிர்ப்பு : அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

சேலம், ஜூலை 1- நோய் தடுப்பு நடவடிக்கையாக சேலம் சின்னக்கடை வீதியை அடைக்க முயன்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது

. குறிப்பாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வசிக்கும் பகு திகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அப்பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இதுவரை 96 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில் சேலம் மாநகரின் முக்கிய சந்தையாக விளங்கும் சின்னக்கடை வீதி யில் கொரோனா நோய் தொற்றால் 21 நபர் கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை அடைத்து நோய்த்தடுப்பு பணிகளை மேற் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட் டுள்ளது. அதன்படி மாநகராட்சி அதிகாரி கள் புதனன்று அப்பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளை மூட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்

. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். மேலும், தங்களுக்கு மாற்று இடம் கொடுத்த பின்னரே தங்களது கடைகளை அடைக்க வேண்டுமெனவும் அதிகாரிகளி டம் தெரிவித்தனர்.

 பின்னர், மாநகராட்சி உயர் அதிகாரி கள் மற்றும் காவல்துறையினர் வியாபாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள கடைக ளுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளிக்கப்பட்டது.

அதேநேரம், இப்பகுதியில் நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண் டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்ற னர். இச்சம்பவத்தால் சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

;