tamilnadu

இலங்கை படுகொலை: மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, ஏப். 24-இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கொழும்பு, பாடிகோலா, நெகோம்போ ஆகிய இடங்களில் உள்ள திருச்சபைகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் பயங்கரவாதிகள் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதல்களில் 360க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந் தைகள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனித குலத்திற்கு எதிரான இந்த கொடூரச் சம்பவம் மனிதநேயமுள்ளோர் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும், சொல்லொண்ணா துயரத்திற்கும் ஆளாக்கியிருக்கும் இந்த சம்பவத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனத் தையும், வேதனையையும், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப் பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-இலங்கையின் ஒரு சிறுபான்மை மதத்தவரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்தக் கொலைபாதகச் செயலை செய்தவர் எந்த மதத்தவராக இருந்தாலும் கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். படுகொலைகளைத் தடுக்கத் தவறிய இலங்கை அரசு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகிலும் தனது கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வேண் டும்.


குறுகிய அரசியல் நோக்கில் விஷயத்தைக் கையாளக் கூடாது.பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்பதுதான் இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிற மதத்தவரை கொலை செய்யுமாறு எந்த மதமும் சொல்வதில்லை. இதைச் செய்வதெல்லாம் மதப் போர் வையை போர்த்திக் கொண்டு அலையும் வெறியர்களே. அவர் கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை அநியாயமாகப் பயன்படுத்துகிறார்கள்.இதில் சம்பந்தப்பட்ட கொலைபாதகர்களை, அவர்களின் பயங் கரவாத அமைப்புகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவர்கள் சார்ந்த மதத்தையோ, அந்த மதத்தைப் பின்பற்றுவோரையோ பழிக்கு ஆட்படுத்தக் கூடாது. அது மதவெறியர்களுக்கே உதவும். அப்படிச் செய்யும் வேலை இலங்கையில் நடப்பதாக தெரிகிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.மேலும் இந்தக் கொலைவெறி ஆட்டத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருக்கலாம் எனும் சந்தேகமும் வலுத்து வருகிறது. அதையும் கண்டுபிடித்து அம் பலப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் கடமை.இந்தியாவிலும் சில விஷம சக்திகள் இந்தப் படுகொலைகளைப் பயன்படுத்தி சிறுபான்மை மதத்தவர் மீது வெறுப்புணர்வை விசிறிவிடப் பார்க்கின் றன, அதற்கு யாரும் இரையாகி விடக் கூடாது. மத நல்லிணக் கமே அனைத்து வகை மத வெறியர்களையும் தனிமைப்படுத்தும் என்பதை மனதில் கொண்டு மக்கள் ஒற்றுமை யைப் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

;