tamilnadu

img

பாஜகவுக்கு வாக்களித்தால் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு – 5 பேர் கைது  

பாஜகவுக்கு வாக்களித்தால் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும் எனக்கூறி போலி வங்கி காசோலைகளை வழங்கிய பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவு பெற்றதை ஒட்டி அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தேர்தல் பரப்புரையை நிறைவு செய்துள்ளனர்.  

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியின் 110 வார்டின் புஷ்பா நகரில் பாஜகவைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த சிலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாஜகவிற்கு வாக்களித்தால் 5 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு உதவும் வகையில் காசோலை வழங்கப்படும் எனக்கூறி பொதுமக்கள் என நினைத்து திமுகவினரிடம் வாக்கு கேட்டுள்ளனர். மேலும் மாதிரி காசோலையை ஒன்றையும் வழங்கியுள்ளனர்.  

இதை அறிந்த திமுகவினர் அவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்த காசோலையில் புதுமைப்பெண் என பெயரிட்டு போலி வங்கி காசோலையை தயாரித்து மக்களை ஏமாற்றியதும் தெரிய வந்தது.    

அதனைதொடர்ந்து அவர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

;