tamilnadu

img

அரசு கலைக்கல்லூரி

கள்ளக்குறிச்சி, ஜூன் 14- கள்ளக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரியில் முறை கேடாக மாணவர் சேர்க்கை நடப்பதாகக் கூறி பெற்றோர்கள், மாண வர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் சேர்க்கைக்காக விண்ண ப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண் மூப்பு அடிப்படை யில் கல்லூரியில் பாடப்பிரிவு கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. இதில் கல்லூரியில் சேர்க்கை க்காக விண்ணப்பித்த மாணவர்களில் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு மாண வர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் முறையாக மாணவர் சேர்க்கை நடை பெறவில்லை என்றும், அதே போல் கல்லூரிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத சிலர் புரோக்கர்களாக செயல்பட்டு பணம் பெற்றுக்கொண்டு சேர்க்கை பெற்றுத் தருவதாக புகார் எழுந்தது. அதனடிப்படை யில் குறைவான மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் வெள்ளியன்று (ஜூன் 14) சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள் இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் முறையாக விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு வந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு பெற்றோருக்கு ஆதரவாக கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்டும் முறை யான விளக்கம் கிடைக்காத தால் கல்லூரிக்கு முன்பு மாணவர்களும், பெற்றோர்க ளும் முற்றுகைப் போராட்ட த்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முறையாக கல்லூரியில் மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;