tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவுக்கு ஓட்டு கேட்ட நடிகை குஷ்பு!
பாஜக-வினர் அதிர்ச்சி

சென்னை, ஏப். 19 - பாஜக-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு, தன் கணவரும் திரைப்பட இயக்கு நருமான சுந்தர் சி மற்றும் மகள்களு டன் சென்னையில் வாக்களித்த புகைப் படத்தை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றியிருந் தார். 

கூடவே, “நான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன்.. நீங்களும் மறக்காமல் வாக்களியுங்கள்” என்று GoAndVote,Duty,Vote4INDIA, VoteFor400Paar போன்ற ஹேஸ்டேக்க ளைப் பயன்படுத்தி இருந்தார். இதில் மற்றதைவிட ‘Vote4INDIA’ (இந்தியா வுக்கு வாக்களியுங்கள்) என்ற ஹேஸ் டேக்கை குஷ்பு பயன்படுத்தியது பாஜக வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, “இந்தியாவிற்காக வாக்களியுங்கள் என்ற நோக்கத் தில்தான் அவ்வாறு பதிவிட்டேன். இந்தியா கூட்டணியை நான் ஒருபோ தும் ஆதரித்ததில்லை” என்று குஷ்பு சமாளித்துள்ளார்.

அரசியலை விட்டே விலகுகிறேன்...
அண்ணாமலை ஆவேசம்

கரூர், ஏப். 19 - பாஜக மாநிலத் தலைவரும் கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை, கரூர் ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித் தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக் குப் பேட்டியளித் தார்.  

அப்போது, கோவையில் வாக் காளர்களுக்கு பாஜக சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப் பட்டதாக வெளி யான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  இதனால் ஆவேசம் அடைந்த அவர், “கோவையில் பாஜக ஓட்டுக்கு பணம் தரவில்லை. அப்படி பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன். உளவுத்துறை, காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் என யாராவது ஒருவர் தொ குதிக்குள் பாஜகவினர் யாராவது வாக்க ளிக்க பணம் கொடுத்தார்கள், அல்லது கொடுக்க முயற்சித்தார்கள் என்று நிரூ பித்தால் நான் அரசியலை விட்டே வில குகிறேன்” என்றும் கொந்தளித்தார்.

புதுச்சேரியில் 77.51 சதவிகிதம்
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்ற மொத்த வாக்கா ளர்கள் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699. இவர்களுக்காக காரைக்கால், மாஹி,  ஏனாம் ஆகிய பகுதிகளில் 967 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏப்.19 காலை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் விறு விறுப்பாக நடைபெற்றது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 77.51 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.  

பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பெண்கள் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு காவல்துறை உதவியுடன் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டு, வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

விளவங்கோட்டில் 64.54 சதவிகிதம்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மாவட்டம், விள வங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் உட்பட 10 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவின் முடிவில் இரவு 7 மணி நிலவரப்படி 64.54 வாக்குகள் பதிவாகின.

இந்தியாவே பாஜகவின் கைவிட்டுப் போகிறது!

ஆ. ராசா பேட்டி
பெரம்பலூர், ஏப்.19 - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, தனது சொந்த ஊரான பெரம் பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசின் சாதனை கள், பாசிச பாஜக அரசின் உளவியல் ஆகியவற்றை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது. சாதி, மதம், ஊழல் கூட்டணி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தில் கால் பதிக்க நினைத் தார்கள். ஆனால் பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில் முதலமைச் சரின் பிரச்சாரம் அமைந்தது. இன்றைக்கு இந்தியாவே அவர்களின் கையை விட்டுப் போகிறது” என்றார்.

;