tamilnadu

img

தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு...   ஊரடங்கில் பசியாற்றும் கங்குலி 

கொல்கத்தா
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாட கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டுள்ளனர். 

ஒருவேளை உணவுக்கே அல்லாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும் (பிசிசிஐ), முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொல்கத்தாவைச் சேர்ந்த ‘இஸ்கான்’ என்ற அமைப்பிற்கு  10,000 பேருக்கு உணவு வழங்கத் தேவையான நிதியைத் தினமும் வழங்கி வருகிறார். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பேளூர் மடத்திற்கு 20,000 கிலோ அரிசியை வழங்கி இருந்த கங்குலி தான் வழங்கப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப் படுகிறதா என்பதை அறிய உணவு கூடத்திற்கு அடிக்கடி சென்று வருகிறார்.
 

;