tamilnadu

img

கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் - பினராயி விஜயன்

கேரள முதல்வரின் தமிழ் டுவீட்...

இந்த வருடம் கேரளாவில் பெருமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டம் பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அவ்வூர் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை.

தற்போது அரசு நிவாரண முகாம்களில் தங்கி வரும் அந்த பகுதி மக்களை இன்றைக்கு சந்தித்தேன்.
பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பதார்களுக்கும் முடிந்த அளவு உதவி செய்ய கேரள அரசு முயற்சி செய்து வருகிறது.  செவ்வாய்க்கிழமை மாலை வரை 91 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 1243 அரசு முகாம்களில் 224506 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நூற்றாண்டு கண்ட பெருவெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடத்தில் இந்தப் பேரழிவு என்பது குறிப்பிடத்தக்கது. UN மதிப்பீட்டின் படி இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர 31,000 கோடி ரூபாய் தேவை.

இந்தச் சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

கேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகையாக தேவைப்படுகிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முடிந்த அளவுக்கு உதவுங்கள்.

பினராயி விஜயன்
கேரள முதல்வர்.

;