tamilnadu

img

கல்விக் கட்டணத்தை குறைக்க புதுவை துணை வேந்தர் உறுதி

புதுச்சேரி, பிப். 28- பல்கலைக் கழக கல்வி கட்ட ணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்துக் கட்சி தலைவர்களிடம் துணை வேந்தர் உறுதியளித்தார். புதுச்சேரி மத்திய பல்கலைக்  கழகத்தில் புதுச்சேரி மாணவர்க ளுக்கு கல்வியில் 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாணவர் கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இலவச பேருந்து வசதி தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ எம்எல், காங்கிரஸ், திமுக, விசிக, திக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரதேசச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கி னார். சிபிஐ மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், முன்னாள் செய லாளர்கள் விசுவநாதன், நாரா.கலைநாதன், சிபிஎம் தமிழ் மாநி லக்குழு உறுப்பினர் வெ.பெரு மாள், மூத்தத் தலைவர் தா. முருகன், திமுக தெற்கு பிரிவு  துணை அமைப்பாளர் அனி பால்கென்னடி, விசிக முதன்மைச்  செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ எம்எல் மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன், திரவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். பேச்சுவார்த்தை மாணவர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பல்கலைக் கழக துணை வேந்தர் குர்மீத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இன்னும் ஒரு சில  நாட்களில் மத்திய மனித வளத்  துறையிடம் பேசி கல்விக் கட்ட ணம் குறைக்க நடவடிக்கை எடுப்ப தாகவும் புதுச்சேரி மாணவர்க ளுக்கு இடஒதுக்கீடு குறித்து பல்க லைக் கழக குழுவிடம் பேசி  உரிய நடவடிக்கை எடுப்பதாக வும் உறுதியளித்தார்.

;