tamilnadu

img

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான உதவி ரூ.5 லட்சமாக உயர்த்தியது கேரள அரசு

திருவனந்தபுரம்:
மூன்றாம் பாலினத்தினர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கான உதவித்தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை (டிரான்ஸ்மேன்) மிகவும் சிக்கலானதும் அதிக கட்டணம் கொண்டதுமாகும்.பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம்மட்டுமே இந்த பாலின மாற்றம் செய்யமுடியும். எனவே இதற்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அனுமதிக்கப்படும்,

ஏனெனில் இது டிரான்ஸ் பெண் அறுவைசிகிச்சைக்கு ஒப்பீட்டளவில் குறைந்த செலவு காரணமாக, ஆணில் இருந்து பெண்ணாக மாறும் (டிரான்ஸ் வுமன்)அறுவை சிகிச்சைக்கான செலவு குறைவு என்பதால் இதற்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு தேவையான ரூ.50 லட்சம்அனுமதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மூன்றாம் பாலினத்தினரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டுவரவும், அவர்களது சுகாதாரத்தையும், மனநலத்தையும் நோக்கமாக கொண்டு சமூக நீதித்துறை அமல்படுத்தும் திட்டங்களில் மிகவும் கவனம் பெற்றுள்ள ஒன்று பாலின மாற்றுஅறுவை சிகிச்சைக்கான நிதி உதவியாகும். பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த பெருந்தொகை தேவைப்படுவதால் பாலின மாற்றத்தை முழுமையாக செய்ய முடியாத அவலநிலை பலருக்கும் ஏற்படுகிறது. மூன் றாம் பாலினத்தினரின் வாழ்க்கையில் பாலினமாற்ற அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு இந்த உதவித்தொகை அதிகரிக்கப் பட்டது. பெண்ணிலிருந்து ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்காக 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.25 லட்சமும், ஆணிலிருந்து பெண்ணாக மாறும் 10 பேருக்கு தலா ரூ.2.5 லட்சம் என ரூ.25லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் அனுமதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பிறகு சமர்ப்பிக்கும் செலவு பட்டியல்மற்றும் தொழில்நுட்ப குழுவின் பரிந் துரை அடிப்படையில் உதவித்தொகை அனுமதிகப்படுகிறது. 

சமூகத்தின் மிகவும் புறக்கணிக்கப் பட்ட பிரிவுகளில் ஒன்றான மூன்றாம் பாலினத்தோரை சமூகத்தின் பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான மாற்று பாலினத்தோருக்கான கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் கேரளம் ஆகும். இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக மாநில அரசின் சமூக நீதித் துறை பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து வருகிறது. இவற்றை ஒருங்கிணைக்க விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

;