states

img

“போர் வீரராக இருங்கள்” பிரச்சாரம் தொடக்கம்.... அடுத்த கட்டத்தில் கேரள கோவிட் தடுப்பு இயக்கம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் தடுப்புக் காக அம்மாநில சுகாதார துறையால் தொடங்கப்பட்ட ‘போர் வீரராக இருங்கள்’ (பி/தி வாரியர்) பிரச்சாரத்தை முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரச்சாரத்தின் இலச்சினையை சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜிடம் முதல்வர் வழங்கினார்.இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கங்கள் மூன்றாவது அலையின் தீவிரத்தை குறைப்பதும் தடுப்பூசியை தீவிரப்படுத்துவதும் ஆகும். கேரளாஇதுவரை எடுத்த தடுப்பு நடவடிக்கை களின் விளைவாக, பலர் இந்த நோயால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி போடுவதன் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.சோப்பு, முகக் கவசம், தனிமனித இடைவெளி (எஸ்எம்எஸ்) என்கிற சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது, தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பது, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் படுக்கை நோயாளிகளுக்கு நோய் பரவுவதைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.மாநிலம் முழுவதும் செய்தித் தாள்கள், காட்சி, குரல் பதிவு, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் கோவிட் -க்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் முக்கியத் துவம் மற்றும் பொறுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர்.

;