politics

img

உ.பி. சட்டப்பேரவை, 2024 மக்களவை தேர்தலிலும் அடி காத்திருக்கிறது..... பாஜகவுக்கு யஷ்வந்த் சின்ஹா எச்சரிக்கை.....

கொல்கத்தா:
மேற்குவங்க தேர்தல் முடிவு குறித்து, பாஜக முன்னாள் தலைவரும், வாஜ்பாய் ஆட்சியின்போது, மத்திய அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா பேட்டி ஒன்றைஅளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பெற்றது மகத்தான வெற்றி என்பதையும், மோடியும், பாஜக தலைவர்களும் பெற்றது பொய்யான வெற்றி என்பதையுமே மேற்குவங்கத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந் தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும்ஆட்களை இறக்கி, பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை சேர்த்து பாஜக தலைவர்கள் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் காண்பித்தனர். ஆனால், பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜியை அவதூறாகப் பேசியதற்கு பாஜக-வினருக்கும், பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கோடிக்கணக்கான மக்கள்பதிலடி கொடுத்துள்ளனர். மத்தியில் ஆளும் தலைமை மாற வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் விரும்புகின்றனர். 

எனவே, மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண் டும். மாநில பாஜக தலைவர் திலிப்கோஷ் , பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா ஆகியோரும் ராஜினாமா செய்ய வேண்டும்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2024-ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். யஷ்வந்த் சின்ஹா தற்போதுதிரிணாமுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

;