politics

img

கூட்டாட்சிக்கு பொருந்தாத சட்டங்களை எதிர்த்து நில்லுங்கள்... கேரள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பினராயி அறைகூவல்...

திருவனந்தபுரம்:
“கேரளத்தின் நலனுக்காக கேரள எம்.பி.க்கள், கட்சி வித்தியாசமின்றி ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் கூட்டாட்சிக்கு பொருந்தாத சட்டங்களை எதிர்த்து நிற்க வேண்டும்” என்றும் முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 19-ஆம் தேதிதுவங்கவுள்ள நிலையில், காங்கிரஸ்,இடதுசாரிகள் உள்ளிட்ட கேரளத்தின்அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற் றது. இந்தக் கூட்டத்தில்தான் முதல்வர் பினராயி விஜயன் மேற்கண்ட வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:

“நிகழ்ச்சி நிரலில் உள்ள பிரச்சனைகள் குறித்து மாநிலங்களுடன் கலந்துரையாடுவதைத் தவிர்ப்பதற்காக ஒன்றிய அரசே ஒருதலைப் பட்சமாகச் சட்டமியற்றி வருகிறது. இது கூட்டாட்சி முறைக்கு பொருத்தமற்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எழுப்பப்பட வேண்டும்.மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் தொடர்பான நான்கு முக்கியமான சட்டங்களை ஒன்றிய அரசு மாநிலத்துடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றியுள்ளது. இது விவசாயிகளின் மிகப்பெரும் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. கல்வித் துறையிலும், மாநில அளவிலான அம்சத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கொள்கை வகுத்தல் நடந்துள்ளது. புதிய துறைமுக மசோதாவில் உள்ள விதிகள் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கிறது. மின்சார சீர்திருத்த மசோதாமற்றும் சுகாதாரத் துறை சீர்திருத் தங்களிலும் அதிகாரக் குவிப்பு மேலோங்கியுள்ளது. எனவே, மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் கேரள எம்.பி.க்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும். குறிப்பாக, லட்சத்தீவு சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஒருமனதாக பலத்த எதிர்ப்பைதெரிவிக்க வேண்டும். எதிர்காலத் தில் நடக்கவிருக்கும் பல மோசமானவிஷயங்களுக்கான அறிகுறிதான் லட்சத்தீவு விவகாரம். கேரளாவுடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொள்வதே இதன் பின்னணியிலுள்ள முக்கியமான நடவடிக்கை. இதில், நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த நிலைப்பாட்டை அனைவரும் எடுக்கவேண்டும்.

சமூக பொறுப்புணர்வுக்கான செலவில் மாநில அரசுகளுக்கான முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி உட்படுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் நிதியும், பி.எம். கேர்ஸ் நிதியும் நிறுவனங்கள் சட்டத்தின் 7ஆவதுஅட்டவணையில் உட்படுத்தப்பட் டுள்ளன. இதேபோல முதல்வர் நிவாரண நிதிக்கான நன்கொடைகளும் அட்டவணை 7-இல் உட்படுத்தப்பட வேண்டும். கேரளத்தில், அறிவிக்கப்பட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களும் உரிய நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்
டும். ரயில்வே மற்றும் விமான நிலையமேம்பாட்டு பிரச்சனைகளும் எழுப் பப்பட வேண்டும்.வெளிநாடுகளில் வசிப்போருக்கு- அவர்கள் திரும்பிச் செல்லகூடுதல் விமானங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருவோருக்கு உதவும் தொகுப்பையும் ஒன்றிய அரசுஅறிவிக்க வேண்டும். கோட்டப்புரம் - கோழிக்கோடு தேசிய நீர்வழிப் பாதைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டை பெற வேண்டும். கடல் அரிப்பை இயற்கைப் பேரழிவாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, மாநில அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

;