india

img

துவங்கியது 18-ஆவது மக்களவைத் தேர்தல் 21 மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்களிப்பு

துதில்லி, ஏப். 19- 18-ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி களுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என  17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதி களுக்கு வெள்ளியன்று முதல்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இதேபோன்று சிக்கிம், அரு ணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டின் விளவங்கோடு, திரிபுராவின் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் வெள்ளியன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பு
வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை களின் தீவிர பாதுகாப்புடன் வெள்ளியன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது. மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், மற்ற பகுதிகளில் 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதே போல அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் 6 மணிக்கு முன்பே வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. 

மாநிலங்களும்...  வாக்குப்பதிவு சதவீதங்களும்...

அந்தமான் & நிக்கோபர் தீவுகள்
யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் & நிக்கோபர் தீவுப் பகுதியில் உள்ள  ஒரே ஒரு மக்களவை தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 56.87% வாக்குகள் பதிவாகி இருந்தன.

அருணாச்சலப்பிரதேசம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியுடன், 60 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடை பெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 63.27% வாக்குகள் பதிவாகின. இதே போல அம்மாநில சட்டமன்ற தேர்தலில் 66.15% வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. 

அசாம்
14 மக்களவை தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் முதல்கட்டமாக 5 தொகுதி களுக்கு மட்டும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நில வரப்படி அங்கு 70.77% வாக்குகள் பதிவாகின.

பீகார்

40 மக்களவை தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் முதற்கட்டமாக 4 தொகுதிக்கு மட்டும் வெள்ளியன்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நில வரப்படி 46.32% அளவில் வாக்குகள் பதி வாகி இருந்தன. 

சத்தீஸ்கர்

11 மக்களவை தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் முதல் கட்டமாக வெள்ளியன்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 63.41% வாக்குகள் பதிவாகின.

ஜம்மு&காஷ்மீர்
5 மக்களவை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு&காஷ்மீரில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் முதல் கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 65.08% வாக்குகள் பதிவாகி இருந்தன.

லட்சத்தீவு
அந்தமானைப் போன்று தீவு பகுதி யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் 59.02% வாக்குகள் பதிவாகின.

மத்தியப்பிரதேசம்
29 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் முதல்கட்டமாக 6 தொகுதிகளுக்கு வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 63.25% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மகாராஷ்டிரா
நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கு மட்டும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 தொகுதிகளிலும் மாலை 5 மணிநிலவரப்படி 54.85% வாக்குகள் பதிவாகின.

மணிப்பூர்
வன்முறையால் மிகமோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிக்கு முதல்கட்டமாக 2 தொகுதிகளின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 67.66% வாக்குகள் பதிவாகின.

மேகாலயா
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ள இரண்டு மக்களவை தொகுதிக்கும் ஒரே  கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 69.61% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கு வெள்ளியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அங்கு மாலை 5 மணி நிலவரப்படி 52.73% வாக்குகள் பதிவாகி இருந்தன.

நாகாலாந்து
ஒரே ஒரு மக்களவை தொகுதியைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அங்கு மாலை 5 மணி நிலவரப்படி 55.79% வாக்குகள் பதிவாகின.

ராஜஸ்தான்
25 மக்களவை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் முதல்கட்டமாக 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அங்கு மாலை 5 மணி நிலவரப்படி 50.27% வாக்குகள் பதிவாகி இருந்தன.

சிக்கிம்
வடகிழக்கில் மிக சிறிய மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள ஒரே ஒரு மக்களவை 
தொகுதிக்கும், 32 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 68.06% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதே போல சட்டமன்ற தேர்தலில் 67.95% வாக்குகள் பதிவாகின.

திரிபுரா
2 மக்களவை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் ஒரு மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 76.10% வாக்குகள் பதிவாகின. 

உத்தரப்பிரதேசம்
அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் (80) முதல்கட்டமாக 8 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அங்கு மாலை 5 மணி நிலவரப்படி 8 தொகுதிகளில்  53.56% வாக்குகள் பதிவாகின.
உத்தரகண்ட்

5 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் அனைத்து தொகுதிகளுக்கு வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 5 தொகுதிகளிலும் 57.54% வாக்குகள் பதிவாகின.

மேற்குவங்கம்
42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 3 தொகுதிகளிலும் 77.57% வாக்குகள் பதிவாகின.

;