india

img

கோவிட் 19 : பாஜக அரசின் பொய்கள்.....

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடர்பானதடுப்பூசி போடுவது சம்பந்தமாக, பாஜக, பிரதமரைப் புகழ்ந்து அதீதமான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அவர் இதனை மிகவும்பிரமாதமான முறையில் சமாளித்தார் என்றும், இது உலகிலேயே மிகவும் வலுவான விதத்தில் இருந்தது என்றும், குறிப்பாக சோதனை செய்ததிலும், சமூக முடக்கத்தை அறிவித்ததிலும், சுகாதார வசதிகளைப் போதிய அளவிற்கு கொடுத்ததிலும் மிகச் சிறப்பாகக்கையாண்டார் என்கிற விதத்தில் அமைந்திருக்கின்றன.

உலகில் மிக மிகக் குறைவான அளவிலேயே இந்தியாவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது அனைவரும் அறிந்த ஒன்று, அது அவ்வாறேநிறுவப்பட்டுமிருக்கிறது. இது தொடர்பாக சமூக முடக்கத்தை எவ்வித மானத் திட்டமிடலுமின்றி திடீரென்று அறிவித்ததானது, புலம்பெயர் தொழிலாளர்களின் நீண்ட பயணங்களை உருவாக்கியதையும், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லரயில் போக்குவரத்தைக் கூட அளித்திடாமல் மோடி அரசாங்கம் மறுத்ததையும், இவ்வாறு மக்கள் அளப்பரிய அளவுக்கு துன்பதுயரங்களுக்கு ஆளாகும் நிலையையும் ஏற்படுத்தின. நாடு இரண்டாகப் பிரிந்த நாட்களில்தான் இத்தகைய நிலைமை இருந்தது. அதன்பின்னர் இதுபோன்றதொரு நிலைமை நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டதில்லை. இது, மக்களின் துன்ப துயரங்களை அதிகரித்தது மட்டுமல்லாமல், இது நாடு முழுவதும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற் கும் உதவியது.சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனியே பணிப் பாதுகாப்பு உபகரணங்கள் (PPEs-Personal Protective Equipments) வழங்க வேண்டும் என்பதைஅரசாங்கம் முறையாக நிறைவேற்ற வில்லை.

பிரதமரின் பெயரில் தனியார்அறக்கட்டளை ஒன்றின் மூலமாக மிகப்பெரிய அளவில் பணம் வசூலிக்கப் பட்ட அதே சமயத்தில், அவற்றின் மூலம்சுகாதார வசதிகளை மேம்படுத்திட வோ, சுகாதார ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக வழங்கிடவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயத்தில் அரசின் உயர்மட்டத்தில் உள்ள நிர்வாக இயந்திரம் மூலமாக அரசு ஊழியர்களிடமிருந்தும், பொதுத்துறை ஊழியர்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாக ஒரு நாள் ஊதியம் வசூலிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள்நன்கொடைகள் அளிக்கக் கட்டாயப் படுத்தப்பட்டன. கார்ப்பரேட்டுகள், கார்ப்பரேட் சோசியல் பொறுப்பு நிதியத்திலிருந்து (Corporate Social Responsibility Funds) பங்களிப்புகள் அளிக்கக் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஆயினும் இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணம் எல்லாம் என்னாயிற்று என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துள்ளது. இதனை ஏற்க முடியாது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதி, அரசுத் தணிக்கைக்கு, உட்படுத்தப்பட வேண்டும். அது மத்தியத் தணிக்கைத் தலைவர் (சிஏஜி) மூலம் இருப்பது விரும்பத்தக்கது. இதனைச் செய்ய மறுப்பது என்பது பொதுச் சொத்தை சூறையாடுவதற்கு ஒப்பானதாகும்.கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டி ருந்த சமயத்தில், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைச் சோதனை செய்து பார்ப்பது என்பதுமார்ச் 20 அன்றுதான் தொடங்கியது. எனினும் கொரோனா வைரஸ் தொற்றைகட்டுப்படுத்திட மோடி அரசாங்கம் 2020 ஜனவரியிலேயே சோதனைகளை அறிமுகப்படுத்திவிட்டதாக, பொய்ப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருப்பது தொடர்கிறது.

இந்த சமூக முடக்கத்தால் உருவாக்கப்பட்ட உயிர்வாழ்வதற் கான பிரச்சனைகளும் நாட்டில் பொருளாதார மந்தம் மேலும் ஆழமாகியிருப் பதற்குக் காரணங்களாகும். மிகப் பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பதும், முறைசாராத் தொழில்கள் கடுமையான முறையில் அழிந்துவிட்டதும் கோடானுகோடி மக்களை பசி-பட்டினி நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி ஆரம்பத்திலிருந்தே வருமான வரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் நேரடி ரொக்கப்பணம் அளிக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கொண்டிருந்தது.

அரசாங்கம், இன்று வரையிலும் இதனைச் செய்ய மறுத்துவருவது தொடர்கிறது.அநேகமாக அனைத்து வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் இத்தகைய நடவடிக்கைகள் கடந்த ஓராண்டுகாலமாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களை உள்ளடக்கி ஒரு புதிய ஊக்குவிப்புத் தொகுப்பும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிடன், பதவியேற்பதற்கு முன்பே அறிவித்திருக் கிறார்.      தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்தத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான நிதியை கிரேட் பிரிட்டன் அரசாங்கம் பெரிய அளவில் அளித்திருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனையுடன் அது அவ்வாறு அளித்திருக்கிறது. அதன் செயல் திறனும் பாதுகாப்பும் மூன்று கட்ட சோதனைகளில் மெய்ப்பிக்கப் பட்டபின்னர், அதனை வளர்முக நாடு களுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.

இதே தடுப்பூசியை, பாஜக-வும் பிரதமரும் ஏதோ இந்தியாவின் உற்பத்தி என்பதுபோல் சுதேசி தடுப்பூசி என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது உருவாக்கப்படுவதில் இந்தியா செய்தது எல்லாம், ஆக்ஸ்போர்டிட மிருந்து உரிமம் பெற்றதன் கீழ் உற்பத்திசெய்துகொண்டிருப்பது மட்டுமே யாகும். இதற்காக ஏதேனும் ராயல்டி ஏதும் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.மற்றொரு உள்நாட்டுத் தயாரிப்பு, கோவாக்சின் என்னும் தடுப்பூசியாகும். இதன் செயல்திறன் நிறுவப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக எண்ணற்ற சுகாதாரப் பாதுகாப்புப் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. இது, உண்மையில் தடுப்பூசி போடுவதிலிருந்து மக்களை மனச்சோர்வு அடையச் செய்திருக்கிறது.  இதனால் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதற்கே இட்டுச்செல்லும்.பாஜக-வும் மத்திய அரசாங்கமும் பொய்யின் அடிப்படையில் மக்களைத் திசைதிருப்பும் வேலையையே எப்போதும் செய்து வருகிறது. ஆனால், எதார்த்தம் என்ன என்பதை மக்கள்அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டு வருகிறார்கள்.

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் ஆவணத்திலிருந்து)
 

;