tamilnadu

img

அரசு இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 தொற்றுக்கு ஏன் இலவசமாக சிகிச்சை அளிக்க முடியாது?

புதுதில்லி:
அரசு இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள், கோவிட்-19 தொற்றுக்கு ஏன் இலவசமாக சிகிச்சை அளிக்க முடியாது என்று மத்திய அரசு பதில் சொல்லவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோரடங்கிய அமர்வாயம் மத்திய அரசிடம், எந்தெந்த தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 தொற்றுக்கு இலவசமாக அல்லதுமிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க முன்வந்திருக்கின்றன என்ற விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு ஒருவார காலத்திற்குள் இதற்கான பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.சச்சின் ஜெயின் என்னும் வழக்குரைஞர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார்/கார்ப்பரேட் மருத்துவமனைகள் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்திட முன்வருவதற்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தன்னுடைய மனுவில் தனியார் மருத்துவமனைகள் மிகவும் மிகைப்படுத்தி கட்டணங்கள் வசூலிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாடே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில், அரசாங்கத்தின் நிலத்தில்இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தை அளித்துவிட்டுக் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும்“தொண்டு நிறுவனங்கள்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளவை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்திட கட்டளை பிறப்பித்திட வேண்டும்என்று அவர் கோரியிருந்தது.

;