health-and-wellness

img

நீரிழிவு நோயால் உறுப்புநீக்கம்

மாநில கணக்கெடுப்பு துவக்கம்

சென்னை,செப்.8- நீரிழிவு நோயால் உடல் உறுப்புகள் நீக்கப்பட்டது குறித்து மாநில அளவிலான கணக்கெடுப்பு தொடங்க ப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே நீரிழிவை கண்டறிவதன் மூலம் சிறுநீரக செயலிழப்பு மற்றும் உறுப்பு நீக்கத்தை தடுக்கமுடியும். இது குறித்து ஒரு ஆவணத்தை  சென்னையில்  சர்வதேச நீரிழிவு நிலை கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்க ப்பட்டிருக்கும் பேராசிரியர் ஆண்ட்ரூ போல்ட்டனுடன் இணைந்து  பிரபல நீரிழிவு சிகிச்சை நிபுணரும் ராய புரத்தில் உள்ள பேராசிரியர் எம்.விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மைய இயக்குநரு மான டாக்டர் விஜய் விஸ்வநாதன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் விஸ்வநாதன்  ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்போடு கணக்கெடு ப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.  தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நீரிழிவு நிலையின் காரணமாக, உடலுறுப்பு நீக்கத்தின் விகிதாச்சாரம் எத்தனை விகிதம் உள்ளது என்பது குறித்த ஆய்வாக இது இருக்கும் என்றார்.

;