districts

img

ஆர்.சச்சிதானந்தத்திற்கு கிராமங்கள் தோறும் உற்சாக வரவேற்பு

சின்னாளப்பட்டி,மார்ச் 26- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொ குதியில் போட்டியிடும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தத்தை ஆதரித்து திமுக மாநில துணைப் பொதுச்செய லாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அரி வாள் சுத்தியல் நட்சத்திரம் சின் னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

பிள்ளையார்நத்தம் ஊரா ட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலா ளர் பிள்ளையார்நத்தம் முரு கேசன் தலைமை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர் உலகநாதன் வரவேற்றார். ஒன்றிய பெருந்தலைவர் மகே ஸ்வரி முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜ கணேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். 

கும்ப மரியாதை வரவேற்பு
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக் கும், சிபிஎம் வேட்பாளர் சச்சிதா னந்தத்திற்கும் பிள்ளையார் நத்தம் கிராம மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், ‘‘கிரா மங்களில் வறுமையை ஒழித்தது நூறு நாள் வேலை திட்டம் தான். கடந்த 10 வருடங்களு க்கு முன்பு திண்டுக்கல் மாவட் டம் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு விருது வாங்கியது. 

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு நூறு நாள் வேலை திட்டத்தை முற்றி லும் ஒழிக்கும் முயற்சியில் இறங்கியது. தற்போது பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை முடக்கும் வகையில், ரூ.1  லட்சம் கோடி நிதி வழங்குவ தற்கு பதிலாக ரூ.60 ஆயிரம் கோடியை மட்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்க ளுக்கு நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கூலி யாக வழங்கியுள்ளது. மீத முள்ள ரூ.40 ஆயிரம் கோ டியை பாஜக அரசு வழங்க மறுக்கிறது. 

‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனா ளிகள் அனைவருக்கும் ரூ.400 ஊதியம் வழங்கப்படும். 

எனவே, நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் ஆர்.சச்சிதானந்தத்தி ற்கு அரிவாள் சுத்தியல் நட் சத்திரம் சின்னத்திற்கு வாக்க ளித்து அவரை அமோக வெற்றியை பெறச் செய்ய வேண்டும்’’ என்றார். 

கிராமங்கள் தோறும் உற்சாக வரவேற்பு
இதேபோல ஆலமரத்துப் பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் தலை மையில் அமைச்சர் ஐ.பெரிய சாமிக்கும், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் கல்விக்கட்டணம் வழங்கிய தோடு தேர்வு கட்டணமும் வழங்கியதால் ஆத்தூர் தொகு தியில் உள்ள கிராமப்புற ஏழை களின் சிரமங்கள் குறைக்கப் பட்டுள்ளது’’ என்றார்.  

இதனை தொடர்ந்து செட்டியபட்டி, காந்திகிராமம் ஊராட்சி பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் தொப்பம்பட்டி, ஆதி திராவிடர் காலனி, அருந்ததி யர் காலனிக்கு வந்த அமைச் சர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை நூற் றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

 அப்போது அமைச்சர் பேசு கையில், ‘‘கலைஞர் பிறந்தாள் அன்று தொடங்கப்பட உள்ள கலைஞரின் கனவு இல்ல திட்ட  மூலம் வீடற்றவர்களுக்கு வீடு கள் கட்டித் தரப்படும். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் ரூ.35 ஆயிரம் கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன்படி, வருடத்திற்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக் கப்படும்’’ என்றார்.  பஞ்சம்பட்டி பாஸ்கா மை தானம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வேட்பாளருடன் சென்று தேநீர் அருந்திய பின், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேக ரித்தார்.  

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நட ராஜன், தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. நாகராஜன், மார்க்கிரேட் மேரி, மாவட்ட மகளிர் அணி அமைப் பாளர் மருதாம்பாள் ஆல்பர்ட், திமுக நிர்வாகி அம்பைரவி, சிபிஎம் மத்தியப் குழு உறுப் பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரபோஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஒன்றியச் செயலாளர் சூசைமேரி, சிஐடியு கன்வீனர் வி.கே.முருகன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் கள் தமிழரசன், மைதீன்பாவா,  ஆத்தூர் தொகுதி செயலாளர் ஆ.தண்டபாணி, ஒன்றிய செயலாளர் அரசு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளை ஞர் அணி துணை அமைப்பா ளர் ப.ராஜேஸ்பெருமாள், காங்கிரஸ் மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ், அகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் நந்தகோபால், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம் பட்டி விவேகானந்தன், பஞ்சம் பட்டி மணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உலக நாதன் (பிள்ளையார்நத்தம்), கருப்பையா (தொப்பம்பட்டி), ராஜா (செட்டியபட்டி), ராணி ராஜேந்திரன் (சீவல்சரகு), சேகர் (அம்பாத்துரை), ஆறுமுகம் (ஆலமரத்துப் பட்டி), பாப்பாத்தி நாகராஜ் (பஞ் சம்பட்டி), ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலை வர் ஏ.சிவக்குமார், துணைச் செயலாளர் ராஜேந்திரன், எம்.சிபாண்டியன், வசந்தா கென்னடி, பொருளாளர் கருப் பையா, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, சின்னாளபட்டி பேரூர் செயலாளர் மோகன் ராஜ், துணைச்செயலாளரும், 4-ஆவது வார்டு உறுப்பினரு மான எம்.ஆர்.எஸ்.ஜெய கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வக்கம்பட்டி காணிக்கைராஜ், நாகவள்ளி, செல்வி காங்கேயன், பாப்பா த்தி, ஜோதி மலைச்சாமி, அரசு ஒப்பந்தகாரர்கள் மெல்வின், ஜீசஸ் அகஸ்டின், விக்னேஷ், அரவிந்தன், மாவட்ட பிரதிநிதி ஆரியநல்லூர் தங்கவேல், ஒன்றிய பிரதிநிதி வடக்குத் தெரு சந்திரன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

;