tamilnadu

img

செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

சென்னை, ஏப்.28- ‘பிடே’ கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற் றது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற  இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம்  வென்றார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ்  செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம்  வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற  பெருமையை பெற்றார். இதன் மூலம்  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு  குகேஷ் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை குகேஷ் ஞாயிற்றுக் கிழமை (ஏப்.28) சந்தித்தார். அப்போது,  குகேசுக்கு வாழ்த்து தெரிவித்த முத லமைச்சர், 75 லட்ச ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின்போது, இளைஞர் நலன்-விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விளை யாட்டுத்துறை அதிகாரிகள் உடனி ருந்தனர்.

;