districts

img

பொதுவான மனநல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

புதுக்கோட்டை, ஏப்.28 - பொதுவான மனநல ஆய்வுகளை யும் மருத்துவர்கள் மேற்கொண்டு எதிர்கால சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா. புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான மனநல  மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, கருத்தரங்க மலரை வெளி யிட்டு அவர் பேசியதாவது: இன்றைய பரபரப்பான சூழலில் மனநல மருத்துவம், ஆலோசனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுதொடர்பான மாநில  அளவிலான கருத்தரங்கு புதுக்கோட் டையில் நடைபெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோருமே மன உளைச்சலில் இருக்கும் சூழலில், மருத்துவர்களுக் கான மன உளைச்சல்கள் குறித்தும்  பேசப்படுவது அவசியம். தமிழ்நாட்டில்  பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால் பெண்களின் மனவலிமை அதிகரித்திருக்கிறது. பொதுவான மனநல ஆய்வுகளை யும் மருத்துவர்கள் மேற்கொண்டு அவற் றைப் பதிவு செய்து, எதிர்கால சமூகத் துக்கு வழிகாட்ட வேண்டும். பழைய  அரசு மருத்துவமனை வளாகத்தி லேயே விரிவான மனநல மருத்துவ  சிகிச்சை மையம் அமைப்பதற்காக முதல் வரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநில மனநல மருத்துவச் சங்கத்தின் மக்கள் தொடர்புக் குழுத்  தலைவர் டாக்டர் கார்த்திக் தெய்வ நாயகம், மூத்த மருத்துவர்கள் செ.ராம சுப்பிரமணியன், விஜெயந்தினி, விஜய் சுவாமிநாதன், அரசு மனநலக்  காப்பகத்தின் இயக்குநர் மலையப்பன்,  மாநிலப் பொருளாளர் டாக்டர் சிவ சைலம் உள்ளிட்டோர் பேசினர்.

;