districts

img

ஜேஇஇ மெயின் தேர்வு: பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை

கரூர், ஏப்.28 - ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவில் நடைபெறும் மிகக் கடின மான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ஜே.இ.இ. மெயின் தேர்வை 14.5 லட்சம் மாண வர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்ட நிலையில், கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 36 பேர் தேர்வு பெற்று, இந்திய  அரசால் நடத்தப்படும் என்.ஐ.டி(NIT) கல்லூரி களில் சேர தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்வில்  99.9 சதவீதம் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற  ஹரிஸ்குமார் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது.  பரணி வித்யாலயா ஹரிஸ்குமார் (99.9  சதவீதம்), விஷ்ணு சோழன் (98.4 சதவீதம்), அக்சயா (98.3 சதவீதம்), ராகுல் (98.01 சத வீதம்), தீபக் (96.6 சதவீதம்), சர்வேஷ் (95.6  சதவீதம்), குமரன் எழில்ராம் (95.3 சதவீதம்)  ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். மேலும் 29  மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை  வகித்தார். செயலர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் சுபாஷினி, முதன் மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவு பரிசு  வழங்கி பேசினர்.  பரணி கல்வி நிறுவனங்களில், குரோத்  அகாடமி பயிற்சி மையத்துடன் இணைந்து  அனுபவம் வாய்ந்த ஆந்திரா ஆசிரியர்களைக்  கொண்டு, நீட், ஜே.இ.இ தேர்வுக்கான பயிற்சி  அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் எஸ். சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் கே.சேகர்,  குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியா ளர் வி.எஸ்.பி.கவிதா, துணை முதல்வர் ஆர். பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;