districts

வளம் மீட்பு பூங்காவில்  மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பேராவூரணி, டிச.29-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி சார்பில்,  வளம் மீட்பு பூங்காவில் உயிரியல் பூங்கா, பசுமைக் குடில்  திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடுதல், இயற்கை  உரம் விற்பனை மையம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலை வர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்  தலைவர் கி.ரெ.பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் அன்பர சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர்,  உரம் விற்பனை மையத்தையும் உயிரியல் பூங்காவை யும் தொடங்கி வைத்தார். பின்னர், வளம் மீட்பு பூங்கா வளா கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பலவகையான பழமரக் கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும், தூய்மைப் பணியாளர்கள் 86 பேருக்கு சீருடை,  பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;