districts

கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்க! வழக்கறிஞர்கள் 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு

கும்பகோணம்,  ஏப்.11 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவ ராக இருக்கும் பிரகாஷ், வழக்கறிஞர்கள் சங்க நல னுக்கு எதிராக நடந்துக் கொள் வதை எதிர்த்தும், அவரின்  வழக்கறிஞர் விரோத போக் கையும், வழக்கறிஞர்களை தரக்குறைவாக நடத்துவதை கண்டித்தும், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தி னர் சங்க தலைவர் மா.ராஜ சேகர் தலைமையில், நீதிபதி  பிரகாஷின் செயலை கண்டித்து நீதிமன்ற புறக் கணிப்பு செய்தனர். மேலும், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திரண்ட ஏராளமான வழக்கறிஞர்கள்,  நீதித்துறை யும், தமிழக அரசும், நீதி பதியை விரைந்து பணியிட  மாற்றம் செய்திட வலியுறுத்தி யும், அவரது செயலை  கண்டித்தும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.  நீதிபதி பிரகாஷ் கும்ப கோணம் நீதிமன்றத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்படும் வரை வழக் கறிஞர்கள் சங்க போராட் டம் தொடரும் என வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் மா. ராஜசேகர், ஆர்ப்பாட்டத் திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்தார்.

;