districts

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாநிலத்திட்டம் முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜூலை 23-  மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் துறையில் முதன்மையான அமைப்பாகிய, அமர் சேவா சங்கம் தற்போது 40 ஆண்டு கால அர்ப்பணிப்புமிக்க சேவையை நிறைவு  செய்துள்ளது. கிராமப்புற மறுவாழ்வுத் திட்டங் களிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது. அமர் சேவா சங்கம், தமிழ்நாடு  அரசின் சமக்ர சிக்ஷா கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்வி இயக்கத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிக் குழந்தை களுக்கான கல்வியை வழங்க டிஜிட்டல் மறுவாழ்வுத் தளமான எனேப்ளிங் இன்க்ளூ ஷன் வழியாக அனைவரையும் உள்ளடக் கிய கல்விக்கான மாநிலத் திட்டத்தை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை  (ஜூலை 25) சென்னையில் தொடங்கி வைக்கி றார். இதில் மாநில அமைச்சர்கள்  மா. சுப்பிர மணியன், அன்பில் மகேஸ் பொய்யா மொழி,  பி.கே. சேகர்பாபு, பி. கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் அமர் சேவா சங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவு மலரை வெளி யிட்டு, அமர் சேவா சங்கத்தின் வாழ்நாள் ஆதரவாளர்களையும் முதல்வர் கவுர விக்கவுள்ளதாக சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய  அமர் சேவா சங்கத்தின்  நிறுவனத் தலைவர்  எஸ். ராமகிருஷ்ணன் கூறினார். “மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 40  ஆண்டுகளாக சேவை செய்துவரும் நாங்கள், கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார மளித்தல் மூலம் மாற்றுத் திறனாளிக ளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை சுயவருமானம் ஈட்டக்கூடிய குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார். அமர் சேவா சங்க இல்லங்களில், மாற்றுத்  திறனாளி குழந்தைகளுக்கு இலவச  தங்குமிடம், உணவு, உடை, மருத்துவம், உபகரணங்கள், கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம்  திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

;