தேர்தல் 2019

img

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை

தமிழகத்தில் நடந்த 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 35 லட்சத்து 76 ஆயிரத்து 45 வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதம் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஞாயிறன்று நடந்தது. இதில் 77.62 சதவிகிதவாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் 12 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக முன்னிலையில் உள்ளது. 10 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 


;