தேர்தல் 2019

img

நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் முடிவு

திங்கட்கிழமை நடைபெறவுள்ள 5 ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியோடு முடிவடைந்தது.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(மே6) ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


இதில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 51 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன.உத்தரப்பிரதேசத்தில் 14, ராஜாஸ்தானில் 12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 7, பீகாரில் 5 மற்றும் ஜார்கண்டில் 4 என மொத்தம் 51 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியோடு முடிவடைந்துள்ளது.


;