தமிழகம்

img

மூணு நம்பர் லாட்டரி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

விழுப்புரம்  அருகே மூனு நம்பர் லாட்டரி சீட்டால் ஒரே குடும்பத்தை சேந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
விழுப்புரம் அருகே சித்தேரிக்கரை பகுதியில் நகைத் தொழிலாளியாக இருந்தவர் அருண். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். தொழில் நலிவடைந்ததால் கடன் நெருக்கடியில் சிக்கி உள்ளார். இதைத்தொடர்ந்து அருண் 3 சீட்டு வாங்குவதில் ஆர்வம் காட்டி உள்ளார். இதனால் மேலும் கடனாளியாகி உள்ளார். இதைத்தொடர்ந்து கடன் தொல்லை காரணமாக 3 குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடை கொடுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அருணும் அவரது மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;