தமிழகம்

img

மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

அவிநாசி,ஏப்.10

 அவிநாசி பகுதியில்  வியாழனன்று இரவு 11 மணி முதல் வெள்ளியன்று பகல் 1 மணி வரை   மின் தடை செய்யப்பட்டதால்  பொதுமக்கள்  அவதிக்குள்ளாகினர்.

 கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் , எங்கும் செல்ல முடியாமல் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டில் இருந்தே பொழுதை கழித்து வருகிறார்கள். இதற்கிடையில் அவிநாசியில் வியாழனன்று  இரவு 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது.அப்போது மின்தடை ஏற்பட்டு இரவு முழுவதும் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் விடிய விடிய கண் விழித்தும்,  மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
இது குறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, தெக்கலூர் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் பிரதான மின் இணைப்பு பழுதாகி விட்டது. உடனடியாக சரி செய்யும் பணிகள் மேற்கொண்டபோதும் இரவு தொடர் மழையால் பணிகள் செய்ய முடியாமல் தாமதமானது.   தற்போது பகலிருந்து சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

;