தமிழகம்

img

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் குறித்து சிபிஐ விசாரணை...

சேலம்
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் 2 வியாபாரிகள் காவல்துறை லாக் அப் மரணம் தொடர்பான விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஜூன் 28 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது," தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.  சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்ற அனுமதி பெற்று வழக்கு சிபிஐ  வசம் ஒப்படைக்கப்படும். மேலும் நாளை நடைபெறும் மருத்துவக்குழுவினரின் ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

;