செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தமிழகம்

img

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை:
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரகசிய அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் செவ்வாயன்று தாக்கல் செய்தது. சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. இதையடுத்து அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாகக் கூறி விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;