தமிழகம்

img

ஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு வினாத்தாள்

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஷேர்சாட்டில் 10,11,12ம் வகுப்பு வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான தேர்வின் வினாத்தாள் ஷேர்சாட்  செயலி மூலம் இணையத்தில் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  11 ம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வு நடைபெற்றநிலையில் நேற்று முன்தினமே அதற்கான வினாத்தாள் வெளியாகி உள்ளது. மேலும் இன்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகி விட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது 

;