தமிழகம்

img

விடுமுறை ரத்து.... கோயம்பேடு சந்தை வழக்கம் போல் இயங்கும் 

சென்னை
தமிழகத்தின் முக்கிய காய்கறி சந்தையான சென்னை கோயம்பேடு சந்தை ஊரடங்கு உத்தரவு விதிகளை உட்படுத்தி அரசின் விதிமுறையின் கீழ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  

புதனன்று திடீரென கோயம்பேடு சந்தைக்கு 2 நாள் (நாளையும், நாளை மறுநாளும்) விடுமுறை விடப்போவதாகச் சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம் அறிவித்தது. கொரோனா வைரஸால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வரும் கோயம்பேடு சந்தை திடீரென விடுமுறை அளிக்கப்படுவதாகக் கூறியது சென்னை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கம் போல இயங்கும் என்று கோயம்பேடு அனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

;