தமிழகம்

img

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

சென்னை:
சாத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி.சுப்பிரமணியம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக் கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள் கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜி.சுப்பிரமணியம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று  கூறப்பட்டுள்ளது.

;