tamilnadu

img

திருவாரூர், மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பிரச்சாரம்

திருவாரூர்:
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் இருசக்கர வாகனங்கள் பிரச்சாரம் இயக்கம் நடைபெறுகிறது. 

இதில் திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகர் பகுதிகளில் சிபிஎம் சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. மாவூர் கடை வீதியில் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமையில் புறப்பட்ட பிரச்சாரத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். பயணக்குழுவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பி.மாதவன், ஜி.பவுன்ராஜ், ஜெயபால், எஸ்.சேகர், கே.எஸ்.கோசிமணி, பாலு, நகரக்குழு உறுப்பி னர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இக்குழுவினர் புதூர், துரைக்குடி, கோமல், திருக்காரவாசல், பின்னவாசல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். துண்டுபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. சுமார் 70 கி.மீ பயணத்திற்கு பிறகு திருவாரூர் நகர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் பிரச்சாரப் பயண நிறைவுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.பழனிவேல் உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராமசாமி, நகர செயலாளர் எம்.பாலசுப்ர மணியன், நகரக்குழு உறுப்பினர் பக வன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயணத்தின் தொடர்ச்சியாக சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவாரூர் ஒன்றியம் புலிவலம் கடைவீதியிலும், மாலையில் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றவுள்ளார்.

மன்னார்குடி
கட்சியின் மன்னார்குடி நகர ஒன்றியக் குழுக்கள் சார்பாக நடை பெற்ற இப்பிரச்சார இயக்கத்திற்கு நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.திருஞானம் முன்னிலை முன்னிலை வகித்தார்.கமலாபுரம் பாலத்தில் பிரச்சார இயக்கத்தை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பிரச்சார இயக்கம் கமலாபுரம் பூத மங்கலம் மற்றும் அவைகளின் உள் கிராமங்களிலும், கூத்தாநல்லூர் கடைத்தெருவில் இரண்டு முனைகளிலும் நடைபெற்றது. இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கே.டி.கந்தசாமி, ஏ.தங்கவேலு, ஜி.ரெகுபதி, வி.லட்சுமணன், கே.மகாதேவன், ஜி.தாயுமான வன், பி.கலைச்செல்வி, சிஐடியு டி.ஜெகதீசன், மாதர் சங்க நிர்வாகி ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மன்னார்குடி நகரக்குழு கட்சி அலுவலகத்திலிருந்து ஒலிப் பெருக்கி பொருத்திய டெம்போ வாகனம் மற்றும் இருசக்கர வாக னங்கள் அணிவகுத்து புறப்பட்டு கீழப்பாலம், சவளக்காரன் லெட்சு மாங்குடி, வழியாக பிரச்சாரம் செய்து கொண்டே கமலாபுரம் பிரச்சாரக் குழு வந்தடைந்ததும் துவக்க நிகழ்ச்சி நடை பெற்றது. ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. 

;