articles

img

அத்துமீறி நுழையும் அழையா விருந்தாளி - பத்திரிகையாளர் டிம் ஷ்வாப்

பில்கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடுகளை பத்திரிகையாளர் டிம் ஷ்வாப் -  The Bill Gates problem_ reckoning with the myth of the good billionaire என்ற நூலில் அம்பலப்படுத்தியுள்ளார். அவருடைய” நன்கொடை” அரசியல் எப்படி அபரிமிதமான பணத்தை எவ்வித அரசியல் தயக்கமும்  பொறுப்புணர்வும் இல்லாமல் பயன்படுத்த முடிந்தது என்பதை இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார். தி இந்து (15/4/24) நாளிதழுக்கு மின்னஞ்சலில் ஒரு நேர்காணலை அளித்துள்ளார். அதன் சில பகுதிகள்: 

எனது அறிக்கை கேட்ஸ் அறக்கட்டளையை கட்டுப்பாடு எதுவுமற்ற ஒரு அரசியல் அமைப்பாக கருதுகிறது. உலக நாடுகளின்  தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை அவர் எப்படி சந்திக்கிறார், பொது சுகாதாரம் முதல் கல்வி வரை அனைத்திற்கும் கொடை அளித்தலின் மூலம் எப்படி  தலையிடுகிறார்  என்பதை காட்டுகிறது.இது தொண்டு  அல்ல. ஜனநாயகத்தை சிதைக்கும் அரசியல் செல்வாக்கு. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த உண்மையை மறைக்கின்றன. அவருடைய அறக் கட்டளையின்” நற்செயல்களை” பற்றி மட்டும் பேசு கின்றன. எனவே, கேட்ஸ் பற்றிய விமர்சனங்களை வெளியிடுவது அவ்வளவு எளிதல்ல! 2021 ஆம் ஆண்டில் (அவருடைய விவாகரத்துக்குப் பிறகு) பெண் ஊழியர்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கேட்ஸ் இதை மறுத்தார். அதே நேரத்தில்  புது சுகாதார நிபுணர்களால் பரவலாக விமர்சிக்கப் பட்டார். தொற்றுநோய் காலத்தில் அவருடைய தலைமையிலான உதவிகள் கடும் சர்ச்சையில் சிக்கின. பிக் ஃபார்மா  என்ற நிறுவனத்துடன் அவ ருக்கு இருந்த வணிகத் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது. அவர் கொடையாளராக வளர்ந்து வந்த அதே  காலகட்டத்தில் நிறைய லாபமும் ஈட்டிக் கொண்டி ருந்தார். கொடையை பாராட்டிய மேற்குலக பத்திரிகை கள் இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்தன. அவரை புனிதமான மனிதாபிமானவாதி, பாசாங்குகளற்ற பேரரசர் என கூச்ச நாச்சமற்றுப் புகழ்ந்தன.

தடுப்பூசி காப்புரிமை தடுப்பு

பொதுச் சுகாதாரம் குறித்த பின்னணி எதுவும் இல்லாத ஒரு நபர் அந்தத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க குரலாக விளங்கினார். இதைப் பற்றிய ஆராய்ச்சியை சுதந்திரமாக மேற்கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் அவருடைய தவறான தலையீடுகள் பல உயிர்களைப் பலி வாங்கின. அது முறைப்படுத்தப்பட்டிருந்தால் பலர் உயிர்பிழைத்திருக்கக் கூடும் என்பதை அவர் குறித்த செய்திகள் இருட்டடிப்புச் செய்தன. உதாரணம்: கோவிட் தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை தள்ளுபடி செய்ய இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விண்ணப்பித்தபோது பில்கேட்ஸ் அதை தடுத்தார். அதே நேரத்தில் தடுப்பூசி விவகாரத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதி அளித்தார். தடுப்பூசிக்கு வழியின்றி  எத்தனை உயிர்கள் இந்த நாடுகளில் பலியாயின என்ற ஆராய்ச்சியை நடத்த எந்த கோடீஸ்வரருக்கு நிதி அளிக்க இவர் முன்வருவார்? அவர் பணியாற்றும் பெரும்பாலான துறைகளில் முறையான பயிற்சி இல்லாதவர். தொற்றுநோய், பருவநிலை மாற்றம், வேளாண்மை இப்படி பல துறைகளில் அவருடைய அத்துமீறல் தொடர்கிறது.

15 ஆண்டுக்கு முன்பே எச்சரிக்கை

n    கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடு எப்படி?

கபோக நிறுவனம். உலக சுகாதாரத்தில் கொள்கை களை உருவாக்கும் செயல்பாட்டில் மிகவும் ஆபத்தான விளைவுகளை இவருடைய தலையீடு ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) மலேரியா ஒழிப்பு திட்டத்தின் தலைவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே  எச்சரித்துள்ளார். n    பில்கேட்ஸ் திட்டத்தில்  இந்தியாவின் நிலைமை என்ன? 20 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய வாழ்க்கையின் தொடக்கத்தில் இந்தியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மையமாக மாற்றினார். அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக கேட்ஸ் அறக்கட்டளையின் மிகப்பெரிய இலக்காக இந்தியா வை குறிவைத்தது. உலகின் மருந்தகம் இந்தியா என கருதப்பட்டதும் அவருக்கு மிகவும் சாதகமானது. தொற்றுநோய்க் காலத்தில் ஆப்பிரிக்க நாடு களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனத்து டன் (Cerum Institute) ஒரு ஒப்பந்தத்தை அவருடைய நிறு வனம் ஏற்படுத்தியது. இதற்கிடையில் 2021ஆம்  ஆண்டில் தொற்றுநோய் பேரலையாக இந்தியாவை  தாக்கிய பொழுது தடுப்பூசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டாலும் இந்தியாவின்  கொள்கை கள், அது தனியார் துறையாக இருந்தாலும் மோடி அரசின் கீழ் இருக்கும் நிர்வாகமாக இருந்தாலும் சரி, எந்த அளவிற்கு பில்கேட்ஸ் இன் திட்டங்களை நம்பி இருந்தன என்பதை நிரூபிக்கின்றன.

மோடிக்குப் பட்டம் வழங்கிய பின்னணி?

n     நியூயார்க்கில் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் (உலகளாவிய பாதுகாவலன்) என்ற விருதை பில்கேட்ஸ் வழங்கியதைப் பற்றி:

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் பற்றிய பரவலான அறிக்கைகளை மோடி அரசு எதிர்கொண்ட ஒரு நெருக்கடியான தருணத்தில் தான் பில் கேட்ஸ் பிரதமருக்கு இந்த விருதை வழங்கினார். அறக்கட்டளையின் இந்தியப் பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர்,மோடிக்கு அளிக்கப்பட்ட விருது மனிதநேய பணிகளுக்கு முற்றிலும் விரோதமானது எனக் கூறி ராஜினாமா செய்த நிகழ்வையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. உலக அளவில் ஒரு பொது நலன் சார்ந்த உறவுகளில் பெரும் தவறு இழைக்கப்பட்ட மிகவும் தரம்  தாழ்ந்த தருணம் இது. உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை சந்தித்து தன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவைப் பெற பில் கேட்ஸ் முயற்சி  செய்தார் மோடி மீது கேட்ஸுக்கு உள்ள பாசத்தை விளம்பரப்படுத்தும் நான்கு மணி நேர வீடியோ கடந்த மாதம் வெளியானது. 

இந்தியாவில் பில்கேட்ஸின் பினாமி நிறுவனங்கள்

n     பொது  சுகாதாரத்தில்  கேட்ஸின் பங்கை இந்திய அரசு நிறுவனப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் இந்த உணர்வை மேலும் கெட்டிப்படுத் தின. சியாட்டிலிலிருந்து ஒரு  கோடீஸ்வரர் இந்தியாவின் பொது சுகா தாரத்தில் ஏன் இவ்வ ளவு பெரிய பங்கை வகிக்கிறார் ?

பில்கேட்ஸின் பினாமி நிறுவனங்கள் இந்தியாவில் நிறையவே உண்டு. 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு நிதியை அவர்கள் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் செயலாற்றும் கனடாவைத் தளமாகக் கொண்ட மனிடோபா பல்கலைக்கழகம், பீகாரில் “கேர்”நிறுவனமும் அவற்றில் சில.6  பில்லியன் டாலர் நிதியை பெற்ற கவி(Gavi)என்ற நிறுவனம் ஏழை  தேசத்தில் இல்லை. ஸ்விட்சர்லாந்தில் தான் உள்ளது.  அவருடைய நிதி உதவியின் 90 சதவீதம் பணக்கார  நாடுகளுக்குச் சென்றுள்ளது. இதுவும் ஒரு காலனி த்துவ முன்மாதிரியே. ஏழைகளுக்கு உதவ பணக்காரர்களுக்கு நிதி அளித்தல் எவ்விதத்திலும் பயனற்றது. தொண்டு நிறுவனங்கள் பரப்புரையில் ஈடு படக் கூடாது. ஆயினும் பில் கேட்ஸ் இதையெல்லாம் மீறுபவர். அவருடைய கொடை அளித்தலுக்கு பின்னால் வெளிப்படைத் தன்மை ஏதும் இல்லை. ஏழை நாடுகளை பாதிக்கும் காசநோய், மலேரியா  வியாதிக்கு புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் பிக் ஃபார்மாவின்( Big Pharma) செயல்பாடுகளில் வம்படியாக தலையிடுவது, முதலீடு செய்வது இயக்கு நர் குழுவில் அமர்வது- இதெல்லாம் அவருடைய பாணி. அவருடன் பணியாற்றிய ஒரு சிலரை நேர்காணல் செய்த போது மருந்துகள் சந்தையில் மைக்ரோசாப்ட் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகக் குற்றம்சாட்டினர்.

மோசடியை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

 மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (GMO)விவகாரத்தில் கேட்ஸின் பிடிவாதமான நிலைப்பாடு தோல்வி கண்டுள்ளது.இதற்கான செலவு கூட விரயம் என பல நாடுகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் இன்று விவசாயிகள் இவருடைய மோசடிகளை எதிர்த்து போராடத் துவங்கிவிட்டனர். ஆனாலும் பில்கேட்ஸ் ஒரு காலனித்துவாதியாக நடந்து கொள்கிறார். மக்கள் கருத்தை அவமதிக்கிறார்.

பெரு வணிக தந்திரம்

அவரது அறக்கட்டளை 12 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி உள்ளது. 30 ஆயிரத்திற்கு மேல் அறிவியல் கட்டுரை எழுத உதவி உள்ளது. இது பற்றி என் கருத்து: உண்மைதான். ஆனால் அவரை அரசியல் செயல்பாட்டாளராக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர் கொடுத்ததை விட லாபமாக ஈட்டியது அதிகம். பத்திரிகைகளுக்கு நிதி, ஆராய்ச்சிக்கு நிதி  என்பதெல்லாம் அவருடைய பெரு வணிக தந்திரம்.பொது சுகாதாரம் என்பது அடிப்படையில் ஒரு அரசின்  ஜனநாயகக் கடமை. ஒரு பொதுவெளியின் செயல் பாட்டில் அது ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இந்த  இடத்தில் பில்கேட்ஸ் போன்றவர்களுக்குஇடமில்லை.

n     மக்கள் ஒரு கேள்வியை பில்கேட்ஸிடம் கேட்க வேண்டும்: உங்களிடம் ஏன் இவ்வளவு பணம் குவிந்துள்ளது? 

அடிப்படைத் தேவை கூட பெற முடியாமல் பலர் தவிக்கும் பொழுது நூற்று முப்பது பில்லியன் டாலர்  உங்களிடம் எப்படி வந்தது? எங்களுடைய பொருளா தாரத்தை ஒழுங்குபடுத்தும் அரசியல் அதிகாரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? மொத்தத்தில் இந்த புத்தகம் ஒருவரிடம்  குவியும் அதீத செல்வம் ஜனநாயகத்தை எப்படி அச்சுறுத்துகிறது, திட்டமிட்டு சிதைக்கிறது என்பதை பகுப்பாக செய்கிறது. சமூகம், பொருளாதாரம், பொது சுகாதாரம், கல்வி போன்ற மக்கள் நலன் சார்ந்த கொள்கை உருவாக்கத்தில் பில்கேட்ஸ் போன்ற வர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

தமிழாக்கம்: கடலூர் சுகுமாரன்
 

 



 

;