tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு...

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியே காரியம் சாதிப்பதில் வல்லவர்.
ச.சா - அவர எதுக்கு இப்புடிப் புகழ்றாரு..??
*****
மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்:- புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
ச.சா - ரகசியக் கூட்டம் நடக்குதே.. அதச் சொல்றாரோ..??
*****
செய்தி :- உ.பி. சட்டமன்ற உறுப்பினர் செங்கர் பாஜகவிலிருந்து நீக்கம்.
ச.சா - பாதிக்கப்பட்டவரோட ஒட்டுமொத்த குடும்பத்த அரசு எந்திர உதவியோட சிதைக்குற வரைக்கும் எதுக்கு காத்திருந்தாங்க.. ??
*****
அமெரிக்கா :- ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மீது பொருளதாரத்தடை.
ச.சா - அமெரிக்காவோட அட்டூழியத்திற்கு அளவில்லாம போயிட்டு இருக்கு..!!

;