tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று.... 

சென்னை 
தமிழகத்தில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பாவல் புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்றும் (செவ்வாய்) அதே நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 6,972 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 88 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4,707 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 57,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் 64 பேர் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள்.

;