world

img

ஜப்பானில் கனமழையால் நிலச்சரிவு – நிலச்சரிவில் சிக்கிய 80 பேரைக் கண்டறியும் பணி தீவிரம்

ஜப்பானில் கனமழையால் நிலச்சரிவு – நிலச்சரிவில் சிக்கிய 80 பேரைக் கண்டறியும் பணி தீவிரம்

ஜப்பான் நாட்டின் மத்திய மாகாணமான ஷிஜூவோகாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, டோக்கியோவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  அடாமி நகரில் சனியன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.  இந்த பேரிடரில் சிக்கி 19 பேர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், 35,500க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் 1,500 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில், இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 130 கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.  இதில், இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் யோஷிஹைட் சுகா கூறுகையில், பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடாமியில் தொடர்ந்து மழை நீடிப்பதால், இன்னும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

 

;