what-they-told

img

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்துள்ள விவசாயத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குக!

முதல்வருக்கு விவசாயத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,ஏப்.11-  கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் வேலையிழந்துள்ள விவசாயத்தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கொரோனா விஷக்கிருமியின் பரவலுக்கு உலகமே உள்ளாகியுள்ள நிலையில் நம் தமிழ்நாடும் கடுமையான நிலைமைகளை எதிர்கொ ண்டு வருகிறது.இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் பாதிப்புக்குரிய விதத்தில் மத்திய அரசின் நிதிப்பகிர்வு நமக்கு இல்லை என்ற வருத்தத்துடன் இந்த கடிதத்தை தங்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் அனுப்புகிறோம்.

எங்கள் அகில இந்திய விவசாய த்தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஏப்ரல் 10 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற்றது.அதில் அதிகபட்சமான உழைப்பாளிகள் இந்தியாவில் கிராமங்களில் உள்ள விவசாயக்கூலித்தொழி லாள ர்கள்தான்.இந்தியாவில் 25 கோடி கூலித்தொழிலாளர்கள் என்றால்,அதில் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்ப ட்டவர்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு கொரோனா விஷக்கிருமி நோயிலிருந்து இவர்களை பாதுகாப்பதுடன் அன்றாட வயிற்றுப்பசியிலிருந்தும் வறுமையின் கொடுமையிலிருந்தும் இம்மக்களை மத்திய-மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும்.

மத்திய அரசு விவசாயத்தொழி லாளர்களுக்கு 13 கோடிப்பேர்களுக்கு ஜாப்கார்டு (வேலை அட்டை) வழங்கி யுள்ளது. இந்த உழைப்பாளிகளுக்கு மத்திய அரசு எந்த நிவாரணங்களையும் வழங்கவில்லை. ஆனால் மூன்றாவது கட்ட ஊரடங்கை அமல்படுத்தி யிருக்கிறார்கள். பிரதமர் மோடி கூட கிசான்கா ர்டுகளுக்கு ( நிலம் உள்ளவர்களுக்கு) நிவாரணம் வழங்குவதாக அறிவித் துள்ளார். ஆனால் விவசாயத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இது பாரபட்சமானது என்கிற அடிப்படையில் எங்களது அகில இந்திய அமைப்பும் மாநில அமைப்பும் மத்திய அரசை அணுகுவது என்று முடிவு செய்துள்ளோம்.

தமிழக அரசின் சார்பில் தாங்கள் மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கை அறிவித்து கொரோனா பாதிப்புக்கான பல நிவாரணங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டீர்கள். அடுத்த இரண்டாம் கட்ட அறிவிப்பை 21 நாள் ஊரடங்கு என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று வெளியிட்டீர்கள்.இப்போது மூன்றாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். இது நோய்த்தொற்றை தடுக்க தேவைதான். அதை அரசு செய்கின்றபோது, அதனை ஏற்று அரசுடன் நாங்களும் நிற்போம்.

ஊரடங்கை அமல்படுத்துகிற பொழுது ஏழைகளின் பசித்த வயிறும் அடங்க வேண்டும். அதற்கு நாம் போதிய வழிகாட்டல்களையும் நிவாரணங்களையும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு நாளையும் கடக்கும்போதும் மரணத்தை நோக்கி ஆழமாக தள்ளப்பட்டு கொண்டிக்கிறான். எனவே தமிழக அரசு கூடுதலான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெறுவதில் உறுதியாக இருந்துகொண்டே தமிழக கூலித்தொழிலாளர்களை பாதுகாத்திட கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாய் எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 

- தங்களின் முதல் அறிவிப்பில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 2 நாள் சம்பளம் ரூ.458 வழங்கப்படும்.மார்ச் மாதத்தில் வேலை செய்த தொழிலாளர்களுத்தான் இது கிடைக்கும் என்று அறிவித்திருந்தீர்கள். 18 நாள்கள் கழித்துத்தான் அதுகூட இப்போது அமலுக்கு வருகிறது. இப்போது இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு மொத்த நாள்கள் 40-ஐ தாண்டும் நிலை நீடித்தால் வேலையும் இல்லாமல் கூலியும் இல்லாமல் பட்டினியால் சாகும் நிலை உருவாகும். -இதை தவிர்த்திட ஜாப்கார்டு வைத்துள்ள அனைத்துத் தொழிலாளிகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இது பேரூராட்சி,நகராட்சி பகுதிகளில் உள்ள கூலித்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

-இந்த காலத்தில் ரூ.500 பெறுமான மளிகைச்சாமான்கள் ரேசன்கடை மூலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். அவைகளை இலவசமாக வழங்கிட வேண்டும். மேலும் குடும்பத்திற்கு 30 கிலோ தரமான அரிசியும் 2 லிட்டர் பாமாயில், 2 கிலோ துவரம் பருப்பு, 2 கிலோ சீனி, 5 கிலோ கோதுமை இவைகளை ஏற்கனவே வழங்கப்படும் ரேசனுக்கு மேல் கூடுதலாகவும் இலவசமாகவும் வழங்க வேண்டும். - ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள உழவர் அட்டை வழங்கி, அவர்களுக்கும் இந்த நிவாரணத்தை வழங்கிட வேண்டும்.

 -காலம்கடந்த உதவி மரணத்திற்குப்பின் செய்யும் வைத்தியத்தை போலாகும். எனவே கூடுதல் பணியாளர்கள் உதவியுடன் காலத்தில் இவைகளை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.

-முதியோர் பென்சன் வாங்குவோருக்கும் முதியோர் பென்சன் கிடைக்காத 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கிட வேண்டும். -நுண்நிதி கடன் அனைத்தையும் ரத்து செய்திட வேண்டும்.

-ஊரடங்கு இருப்பதினால் கிராமப்புற நோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி செய்திட வேண்டும்.

-மே மாத கிராமசபை கூட்டத்தில் இந்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். இதற்கு உள்ளாட்சி மன்ற அமைப்புகளுடன் சமூகத்தொண்டு அமைப்புகளையும் இணைத்து திட்டமிட வேண்டும்.

-கோடை காலம் துவங்கிவிட்டதினால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;