tamilnadu

img

கடவுள்களுக்கு பிரிவு 5(4)-ன்படி குடியுரிமை வழங்க வேண்டும்... ‘விசா’ பாலாஜி கோயில் அர்ச்சகர் கோரிக்கை

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உஸ்மான்சாகர் ஏரிக்கரை அருகில் சில்கூர் பாலாஜி கோவில்உள்ளது. வெளிநாடு செல்ல விசாகிடைக்காதவர்கள், இந்தசில்கூர் கோயில் பெருமாள் சிலையின் காலடியில் தங்களது பாஸ்போர்ட்டுகளை வைத்து வணங்கினால் விரைவில் ‘விசா’ கிடைக்கும் என் பது நம்பிக்கை. இதனால் இங்குள்ள பெருமாளுக்கு ‘விசா பாலாஜி’ என்று பெயர். 

இந்நிலையில், பலருக்கு விசா கிடைப்பதற்கு காரணமாக இருக்கும் பெருமாளுக்கு குடியுரிமை சட்டத்தால் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்று கருதிய, அந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன், சில்கூர் பெருமாளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.“கடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அர்ச்சகர், அறங்காவலர் அல்லது நிர்வாக அதிகாரிபோன்ற நட்பு நபர்கள்தான் கடவுள்களை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.எனவே, திருப்பதி ஏழுமலையான், சில்கூர் விசா பாலாஜி, சபரிமலை ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக் கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்கவேண்டும். அனைத்து தெய் வங்களையும் குடிமக்களாக அரசு பதிவு செய்ய வேண் டும்” என்று அர்ச்சகர் ரங்கராஜன் கூறியுள்ளார்.

;