world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமீரகத்தில்  மீண்டும்  கொட்டித் தீர்த்த மழை 

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பயங்கரமான மழைப் பொழிவு ஏற்பட்டு விமான சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.காலநிலை மாற்றத்தால் கடந்த  ஏப்ரல் மாதம் அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமை யான வெள்ளம் உருவானது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்குள்ளாகவே மீண்டும்  மே 2 அன்று அதிகாலையில் ஏற்பட்ட கனமழையால் விமான சேவை, பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

லண்டனில்  அமைகிறது  உலகின் முதல் சீக்கிய நீதிமன்றம்

உலகில் முதல் முதலாக சீக்கிய நீதி மன்றம் இங்கிலாந்தில் உரு வாக்கப்பட்டுள்ளது.சீக்கிய மக்களின் குடும்ப வழக்குகளை சீக்கியக் கொள்கைகளுக்கு ஏற்ப கையாள இந்த நீதிமன்றம் நிறுவப் பட்டுள்ளதாகவும்,இது மத தீர்ப்பாயம் இல்லை எனவும்  நீதிமன்ற இணை நிறுவனர்  பால்திப் சிங் தெரிவித்துள்ளார். இந்த நீதிமன் றத்தில் பெண் நீதிபதிகள் பெரும்பான்மை யாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ஜூன் 1 அன்று திறக்கப்படஉள்ளது. 

பிரிக்ஸ் நாடுகளுடன்  சீனாவின் வர்த்தகம் அதிகரிப்பு

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையேயான சீனாவின் வர்த்தகம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.5லட்சம் கோடிகளுக்கு மேல் எட்டியுள்ளது. 2023 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில்  11.3சதவீதம் அதி கமாகும் என சீன சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தகம் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 14.7 சத விகிதம் வகித்துள்ளது. சீனா- இந்தியா உடனான வர்த்தகம் முதல் காலாண்டில் 8.5 சதவீதம் வரை வளர்ச்சி கண்டதுடன் தொடர்ந்து 5 காலாண்டுக ளாக வளர்ச்சியில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

பிரேசிலில் கனமழை  10 பேர் பலி 

காலநிலை மாற்றத்தால் பிரேசில் நாட்டில் உருவான கனமழை க்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 21 பேர் வரை காணாமல் போயுள்ளனர். ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஏற்பட்ட மோச மான வெள்ளத்தால்  100 க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் சுமார் 3,300 பேர் இடம் பெயர்ந் துள்ளனர். அவர்கள் அனைவரையும் அரசாங் கம் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றி யுள்ளது.  வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவை கையாள்வதாக அம்மாநில ஆளு நர் எடுவார்டோ லைட் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை வழக்கில்  இணையும் துருக்கி

சர்வதேச நீதிமன்றத்தில்  இஸ்ரேல்  மீது தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள இனப்படுகொலை வழக்கில் துருக்கி இணைவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை  அமைச்சர் ஹக்கன் ஃபிடான் தெரிவித் துள்ளார். துருக்கி தலைநகர் அங்காராவில் இந்தோனேசிய வெளியுறவுத்துறை  அமைச் சர் ரெட்னோ மர்சூடியுடனான  செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சூழலிலும் பாலஸ்தீன மக்க ளுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.

;