tamilnadu

img

எதை தள்ளிப் போட்டாலும் விவசாயத்தை தள்ளிப் போட முடியாது - பெ.சண்முகம்

உலகையே அச்சுறுத்தும் கொரனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு, தனிமைப்ப டுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதனால் பலவிதமான நெருக்கடி களுக்கும், பாதிப்புகளுக்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் ஆளாகியுள்ளனர். இருப்பினும் ஆபத்தை உணர்ந்து பெருமளவு மக்கள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். அதே நேரத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை திட்டமிட்டு உரிய காலத்தில் அரசு மேற்கொள்ளாததன் காரணமாக பல பிரச்சனைகள் உருவாகியுள்ளதை மறுப்ப தற்கில்லை. குறிப்பாக விவசா யிகளும், விவசாயமும் பல்வேறு இழப்புகளுக்கும், பாதிப்புகளு க்கும் உள்ளாகியுள்ளன. சந்தைகளில் காய்கறி, பழ ங்கள் தட்டுப்பாடும் மக்களுக்கு தேவையான அளவுக்கு கிடைக்க வில்லை என்ற நிலையும் இருக்கி றது. இதை பயன்படுத்தி நான்கு மடங்கு, ஐந்து மடங்கு விலையை உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்

நிலத்திலேயே அழியும் பயிர்கள்
மற்றொரு பக்கம் விளைந்த காய்கள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சந்தைக்கு கொண்டு வரமுடியாமல் நிலத்திலேயே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவ ட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும். அதே போல் ஒரு பகுதி கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல ப்படும். எல்லைகள் மூடப்பட்டதால் கேரளாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. 144 தடை உத்தரவு போடப்பட்ட மறுநாள் முதல் மேட்டுப்பாளையம் சந்தை மூடப்பட்டுவிட்டது. இதனால் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள உருளைக் கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பலவிதமான காய்கறிகள் எடுக்கப்படாமல் வீணாகி கொண்டுள்ளது. அதே போல் ஒட்டன்சத்திரம் சந்தையிலிருந்து கேரளத்திற்கு பல லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தடை செய்யப்பட்டதால் திண்டுக்கல் மா வட்ட விவசாயிகள் கடும் வருமான இழப்புக்கு ஆளாகியு ள்ளனர். இதுதான் தமிழகம் முழுவதும் நிலைமை. சில்லறை விற்பனைக்கு விவசாயிகளே நேரடியாக விற்பதற்கும் காவல்துறையினரின் கெடுபிடி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

வாழை விவசாயிகள் தவிப்பு
இதேபோல், வாழை விவசாயி கள் மீளமுடியாத பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அறுவடைக்கு தயாராக இருக்கும் வாழைத்தார்களை வெட்டி அனுப்புவதற்கான போக்குவரத்து வசதியும், சந்தையும் இல்லாததால் வயல்களிலேயே வாழைத்தார்கள் பழுத்து பழங்கள் உதிர்ந்து கொண்டுள்ளது. மாநிலத்திற்கு ள்ளும் தடை செய்து அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் செய்வதறி யாது திகைத்து நிற்கின்றனர்.

வீணாகும் 25 லட்சம் லிட்டர் பால்
அதேபோல் பால் உற்பத்தி யாளர்கள் கறந்த பாலை விற்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் தினந்தோறும் சுமார் 1 ½ கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 30 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் சுமார் 50 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறார்கள். மீதி பால் முழுவதும் உள்ளூர் விற்பனை மூலமே பயன்பட்டு வந்தது, தற்போது ஓட்டல்கள், கல்லூரி விடுதிகள், டீக்கடைகள், தனியார் மருத்துவமனைகள் உட்பட மூடப்பட்டுள்ளதால் ஏறத்தாழ நாள்தோறும் சுமார் 25 லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், திருவள்ளூர், திரு வண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் பல்லாயிர க்கணக்கான ஏக்கரில் செய்யப்ப ட்டிருந்த பூ சாகுபடி முற்றிலும் அழிந்து கொண்டு ள்ளது. ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நிலத்திலேயே அழிய விடுவதை தவிர வேறு வழியில்லை. பல பகுதிகளில் கோடை கால சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. உரம், பூச்சிமருந்து, விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும், காவல்துறையினர் கடைகளை திறக்க அனுமதிக்காததால் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆழ்குழாய் பாசனம் உள்ள பகுதிகளில், நெல், மணிலா, மரவள்ளி, கரும்பு, காய்கறி பயிர்கள் ஆகியவற்றிற்கு இப்பொருட்கள் தேவைப்படுகிறது. இப்போதுள்ள இந்த தடை உத்தரவு ஏப்ரல் இறுதிவரை நீடித்தால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். வேளாண் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்படும் என்பதை மத்திய- மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். எதை தள்ளிப் போட்டாலும் விவசாயத்தை தள்ளிப் போட முடியாது. நாற்றுகளை 30 நாட்களில் நடவு செய்து தான் தீர வேண்டும்.

வெட்டவெளியில் கிடக்கும் நெல்
பல இடங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் அளவு போடப்பட்டு எடுத்துக் கொள்ள ப்படாததால் வெட்ட வெளியில் கிடக்கிறது. கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் சிறிய, நடுத்தர தேயிலை விவசாயிகள் 65000 குடும்பங்களும்,  தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 10000 குடும்பங்களும் உள்ளன.  கொரோனானா பாதிப்பினால் 149 தனியார் டீ அரவை தொழிற்சாலைகளும் , 16 கூட்டுறவு டீ தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. டீ இலை எடுக்க முடியாமல் செடியிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர் நிலமை சீரடையும் வரை தேயிலை விவசாயிகள்,  தேயிலை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டுகிறோம்.

எது உண்மையான கணக்கு?
இப்படி எண்ணிலடங்கா பிரச்சனைகளை விவசாயிகள் எதிர்கொண்டிருக்கிற நிலையில் ஆட்சியாளர்களின் கவனத்திலேயே இப்பிரச்சனைகள் இல்லை என்பது வேதனைக்குரியது. மத்திய நிதி அமைச்சர் விவசாயிகளுக்காக புதிதாக எதையும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் உதவி திட்ட நிதி 2000 ரூபாயை முன்கூட்டியே வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆண்டுக்கு ஆறாயிரம் என்பதை முழுமையாக ஒரே தவணையில் கொடுப்பது என்று அறிவித்திருந்தாலாவது பயனுள்ளதாக இருந்திருக்கும். அதிலும், கடந்தாண்டு 14 கோடி விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி அளித்திருப்பதாக மத்திய அரசு சொன்னது. இப்போது நிதியமைச்சர் அவர்கள் எட்டு கோடி விவசாயிகளுக்கு மட்டுமே இந்த 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். எது உண்மையான கணக்கு? 14 கோடி பேர் என்று சொன்னது எப்படி? இல்லையென்றால் 6 கோடி விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்படுவதாக சொல்லப்படும் இந்தப் பணம் ஏன் கிடைக்காது என்பதை அரசு விளக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும்
மேற்கண்ட நிலைமைகளி லிருந்து விவசாயி களையும், விவசாயத்தையும் பாதுகாக்க, காய்கறி, கீரை, பழங்கள் ஆகியவற்றை விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யவும், மக்களுக்கு தாராளமாக கிடைக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறையினரின் அனுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தியாவசியமான தேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை புரிந்து கொண்டு காவல்துறையினர் செயல்பட அறிவுறுத்த வேண்டும். விவசாய இடுபொருட்கள் விற்பனையை தடை செய்யாமல் முறைப்படுத்த வேண்டும். வாழை, பூ சாகுபடி விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்க அரசு முன்வர வேண்டும். ஆவின் நிர்வாகம் கூடுதலாக பால் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் பால் வீணாகாமல் தடுக்க முடியும். ஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய நேரம் இது என்பது உண்மையே. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அரசு முழுமையாக பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாது.

;