tamilnadu

img

இந்தியா உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை துறையின் வர்த்தகம் சரிவு

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியா உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை துறையின் வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.எச்.எஸ். மார்கிட் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரியில் 18 சதவீதமும், ஜூன் மாதத்தில் 15 சதவீதமும் குறைந்துள்ளதாகவும், குறிப்பாக தனியார் துறை நிறுவனங்களின் நிகர இருப்பு ஜூன் 2016-ல் இருந்ததை போலவே தற்போதும் மிக மோசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த அக்டோபர் 2009-ல் கிடைத்த தரவின்படி, கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்தே வர்த்தகம் வீழ்ச்சியடைந்து தான் காணப்படுகிறது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறை, பொதுக் கொள்கைகள் மற்றும் பலவீனமான விற்பனை, பொதுக் கொள்கைகள் ஆகியவற்றால் தொழில்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் இது குறித்து கூறுகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக வரி அதிகமாக உள்ளது, திறமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு பற்றாக்குறை, வரி உயர்வு, நிதிச் சிக்கல்கள், வாடிக்கையாளர்கள் அதிகளவில் சலுகையை எதிர்பார்த்தல் இதுபோன்ற பல பிரச்சனைகள் தங்களுக்கு இருப்பதாகவும், இதனாலேயே தொழில் மந்தம் நீடிப்பதாகவும் கூறியுள்ளனர்.
 

;