tamilnadu

img

மீண்டும் பங்குகள் வீழ்ச்சி... ஒரே நாளில் 2,700 புள்ளிகள் சரிவு!

மும்பை:
இந்தியப் பங்குச் சந்தைகளின் வர்த்தகம் தொடர் சரிவைச்சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, பங்குகள் விலை 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக- சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வரை- இறக்கம் கண்டதால், 45 நிமிடத்திற்கு வர்த்தகத்தையே நிறுத்தி வைக்க வேண்டிய சோகம், மும்பை பங்குச் சந்தையில் நிகழ்ந்தது.

அதன்பின், மெல்ல ஏற்றம் கண்டு, வர்த்தக நேர முடிவில், 34 ஆயிரத்து 103 புள்ளிகளில் பங்கு வர்த்தகம் நிலைபெற்றது. இந்நிலையில், வாரத்தின்முதல்நாளான திங்கட்கிழமையன்று ஆரம்பமே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 1,615 புள்ளிகள் சரிவில்தான்வர்த்தகமே ஆரம்பமானது. 33 ஆயிரத்து 103 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி சிறிது நேரத்தில், 32 ஆயிரத்து 488 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் இறங்கியது.

கடைசியாக வர்த்தக நேர முடிவில், 2 ஆயிரத்து 713 புள்ளிகள் சரிந்து, 31 ஆயிரத்து 390 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டியும் 757 புள்ளிகள் சரிந்து, 9 ஆயிரத்து 197 புள்ளிகளுக்கு இறங்கியது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி ஆகிய இரண்டுமே சுமார்7 சதவிகித இழப்பைச் சந்திந் தன.யெஸ் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரி, பாரத் பெட்ரோலியம், சன் பார்மா, டிசிஎஸ்போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இண்டஸ் இண்ட்பேங்க், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎப்சி, எஸ்பிஐ போன்றவற்றின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.
 

;