tamilnadu

img

தூத்துக்குடி கோர தாண்டவம் ‘தெரியாதவருக்கு’ நாடாளுமன்றத்தில் நடப்பது எப்படி தெரியும்? தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதில்....

மதுரை:
தூத்துக்குடி கோர தாண்டவமே ‘தெரியாதவருக்கு’ நாடாளுமன்றத்தில் நடப்பது எப்படி தெரியும் என தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் சு.வெங்கடேசன் கூறியதாவது:தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக இதுவரை என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று தமிழக முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கு எதிராகவும் இந்த நாட்டிற்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட அனைத்து மசோதாக்களையும் எதிர்த்து தொடர்ந்து போராடியிருக்கின்றோம். தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கின்றோம். கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டுமென்று குரல் கொடுத் திருக்கின்றோம். 

தமிழ்மொழி, பண்பாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக, இந்தி திணிப்பிற்கு எதிராக, சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக தொடா்ந்து போராடியிருக்கின்றோம். இட ஒதுக்கீட்டினை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும், நீட் தேர்விற்கு எதிராக வும் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டினை செய்திருக் கின்றோம்.கொரோனா காலத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத்திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விட தமிழகத்திற்கு குறைவான தொகையை மத்திய அரசுவழங்கியதை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக தொகையை வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றோம்.

இவை அனைத்தும் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 38 எம்.பிக்களாகிய நாங்கள்செய்திருக்கின்றோம். ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர், தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய துறையின் கீழ்உள்ள காவல்துறை துாத்துக்குடியில் கோரதாண்டவம் ஆடிய பொழுது அதையே தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துக் கொண் டேன் என்று சொன்ன ஒரு முதலமைச்சர், நாங் கள் நாடாளுமன்றத்தில் செய்த செயல்பாட்டை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?இவ்வாறு சு.வெங்கடேசன் கூறினார்.

;