tamilnadu

img

சிறைகளில் தண்டனைக் கைதிகளைவிட விசாரணைக் கைதிகளே அதிகம்!

புதுதில்லி:
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 167ஆவது பிரிவின்கீழ் எந்தவொரு நபரும் எந்தவொருக் கிரிமினல் குற்றத்திற்காகவும் 90 நாட்களுக்கும் மேல் சிறையில் இருக்கக்கூடாது. ஆனால், இதனை ஆட்சியாளர்களோ, நீதிமன்றங்களோ கணக்கில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. இதன் காரணமாக, இன்றைய தினம் நாட்டின் சிறைச் சாலைகளில் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையை விட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

2019ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய சிறைச்சாலைகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் ஓராண்டு காலத்திற்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருவதன் சதவீதமும் அதிகரித்துள்ளது.2001க்கும் 2019க்கும் இடையே 3 லட்சத்து28 ஆயிரம் விசாரணைக் கைதிகள் சிறை களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்தண்டனைக் கைதிகள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரம் மட்டுமேயாகும்.

நிலுவையில் உள்ள வழக்குகள்
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங் களில், செவ்வாய்க்கிழமை அன்றைய நிலையில், 1 கோடியே 60 லட்சம் வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றில் 22 லட்சம் வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன. நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை முடியாது இழுத்தடிக்கப்படு வதன் காரணமாக, சிறைகளில், ஓராண்டுக் கும் மேலாகவும், மூன்றாண்டுகளுக்கும் மேலாகவும், ஐந்தாண்டுகளுக்கும் மேலாகவும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டி ருக்கிற விசாரணைக் கைதிகளில் 90 சத வீதத்திற்கும் மேலானவர்கள் பட்டதாரிகள் அல்ல, சுமார் 28 சதவீதத்தினர் எழுத்தறிவற்றவர்களாவர்.

ஆதாரம்: தேசியக் குற்றப் பதிவு பீரோ

;