tamilnadu

img

மாநிலங்களின் நிதி நிலையை அழித்துவிட்டது ஜிஎஸ்டி வரி ராகுல்காந்தி  கடும் விமர்சனம்

புதுதில்லி:
 நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதற்கு ஜி.எஸ்.டி முக்கிய காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார். 

மோடி அரசை விமர்சித்து ராகுல் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, திட்டமிட்ட ஜி.எஸ்.டி-க்கும், மோடி அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி-க்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கியுள்ளார்.கொரோனா பேரிடர் காலத்திலும் ஒழுங்கான நடைமுறையை பின்பற்றவில்லை.  தொடர்ந்து, மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரியானது சிறு தொழில்கள், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலங்களின் நிதி நிலையை அழித்துவிட்டது. அமைப்பு சாரா பொருளாதாரத்தின் மீது நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் ஜிஎஸ்டி என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

;