tamilnadu

img

அமைச்சர் வி.முரளீதரனின் பொய் அம்பலம்.... தூதரக பார்சலில்தான் தங்கக் கடத்தல்... என்ஐஏ

கொச்சி:
‘தங்கக் கடத்தல் தூதரக பார்சலில்நடக்கவில்லை’ என்று மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி.முரளீதரன் கூறிய பொய்யை என்ஐஏவின் விசாரணை அறிக்கை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது.திருவனந்தபுரத்தில் யுஏஇ தூதரகபார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். ஆனால் துவக்கத்திலேயே இந்த கடத்தல் தூதரக பார்சலில் நடந்ததல்ல என்று மத்திய வெளியுறவுத்துறைதுணை அமைச்சர் கூறினார். ஞாயிறன்றும் இதையே ஊடகத்தினரிடம் தெரி
வித்தார். ஆனால் ஞாயிறன்று மாலை மேலும் 6 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்க கடத்தல் தூதரக பார்சல்மூலம் நடந்தது என்பதை என்ஐஏ தெளிவுபட அறிவித்துள்ளது.  

யுஏஇ தூதரக முகவரிக்கு வந்த தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில்குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதன் ஆங்கில வடிவம் .(On 30th July, 2020, NIA arrested two accused viz. Jalal A. M. s/o Smt. Khadeeja, r/o Muvattupuzha,Ernakulam distirct, Kerala and Said Alavi E. @ Bawa s/o Abdulla, r/o Vegara,Malappuram district, Kerala forconspiring with already arrested accused Ramees K. T. and for smuggling gold through diplomatic baggage addressed to the UAE Consulate at Thiruvananthapuram.)தூதரக பார்சலில் அல்ல தங்கம் கடத்தப்பட்டது என்று மீண்டும் மீண்டும்கூறி வழக்கை திசை திருப்ப அமைச்சர் வி.முரளீதரன் முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் அவரது கூற்றை புறந்தள்ளிதூதரக பார்சலில்தான் தங்கம் கடத்தப் பட்டது என்பதை மீண்டும் என்ஐஏ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் அமைச்சரின் பொய் அம்பலமாகி உள்ளது.

;