tamilnadu

img

உத்தரகண்ட் மாநிலத்தின் கோடை தலைநகராக கெய்ரிசான் தேர்வு... 

டேராடூன் 
நாட்டின் வடக்கு பகுதி மாநிலமான உத்தரகண்ட் இமயமலை அடிவாரத்தில் அமைத்துள்ளது. இந்த மாநிலத்தில் மக்கள் வாழிடங்களை விட மலை பகுதி மற்றும் சுற்றுலா தலங்கள் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு கோடை தலைநகரமாக சமோலி மாவட்டத்தில் உள்ள கெய்ரிசான் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ள இந்த கெய்ரிசான் நகரை கோடைகால நகரமாக தேர்வு மார்ச் மாதம் 4-ஆம் தேதி மாநில அரசின் சார்பில் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து ஆளுநர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், மாநில அரசு 2-வது தலைநகருக்கான அரசாணை வெளியிட்டுள்ளது. குளிர் கால தலைநகராக டேராடூன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;