tamilnadu

img

பொருளாதாரத்தை அழித்துவிட்டீர்கள்; கொரோனாவை அழிக்கவில்லை.....

புதுதில்லி:
பொருளாதாரத்தை அழித்துவிட்டீர் கள்; ஆனால் கொரோனாவை அழிக்க வில்லை என்று மத்திய பாஜக அரசு மீது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி எம்.பி.யுடன்  ராஜிவ் பஜாஜ் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு குறித்து கலந்துரையாடினார்.அப்போது ராஜிவ் பஜாஜ் கூறியதாவது:

நிச்சயமாக பொருளாதாரத்தை அழித்து விட்டீர்கள்/தவறான வளை கோட்டை தட்டையாக்கிவிட்டீர்கள்.கொரோனா பரவல் வளைகோட்டை தட்டையாக்கவில்லை. பாதுகாப்பற்ற ஊரடங்கால் வைரஸ் இன்னமும் இருந்து வருவதைத்தான் உறுதி செய்துள்ளோம். ஊரடங்கை விலக்கும் போது மீண்டும் அது தாக்கும். எனவே நீங்கள் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. கொரோனா வைரஸ் கிருமிதொற்று வளைகோட்டை நீங்கள் தட்டை யாக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி என்கிற தவறான வளைகோட்டை தட்டையாக்கிவிட்டீர்கள்.ஒரு பக்கம் முழு அடைப்பு என்கிற ஊரடங்கு முறை. இது காற்றுபுகா முழுஅடைப்பு. இது உலகில் எங்குமே நடக்கவில்லை. காசநோய், வயிற்றுப்போக்கு, நிமோனியா நோய்கள் இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகளின் உயிர்களைப்பறித்து வருகிறது. ஆனால் கொரோனா வுக்காக ஊரடங்கு இப்போதுதான் முதல்முறை. வளர்ந்த நாடுகளின் இதயத்தைத் தாக்கியுள்ளது கொரோனா. பணக்காரர்களும் பிரபலமானவர்களும் பாதிக்கப் படும்போது தலைப்புச் செய்திகள் பெரிதாக இருக்கும்.

இந்தப் பிரச்சனை தொடங்குவதற்கு முன்பாக ,‘ஆப்பிரிக்காவில் தினசரி 8 ஆயிரம் குழந்தைகள் பட்டினியினால் மடிவதாக’ யாரோ ஒருவர்கூறினார். சிவில் சமூகத்தில் நாம் இதையெல்லாம்பார்ப்பதுமில்லை, கவலைப்படுவது மில்லை. இது பற்றியெல்லாம் நமக்கு தெரியாமலேதான் இருக்கிறது. கொரோனா பரபரப்பானதற்குக் காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள செல்வம் மிகுந்த மக்கள்இதில் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான்.மேலும் நாம் உண்மைகளை, தரவுகளை வெளியிடுவதிலும் குறைபாட்டுடன் இருக்கிறோம். இந்த தொற்று கேன்சர் போன்றது. குணமடைய நீண்டகாலம் ஆகும் என்றுதான் மக்களில் பலர்நினைத்து வருகின்றனர். இந்தியா இந்தப் பிரச்சனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது, நீந்திதான் கரை சேர வேண்டும். இவ்வாறு ராஜிவ் பஜாஜ் தெரிவித்தார்.

;