tamilnadu

img

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் விளக்கம்

ஸ்ரீநகர், ஆக. 27- தான் விடுத்த அழைப்பை ராகுல் காந்தி  அரசியல் செய்துவிட்டதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் அவர் கூட்டி வந்ததாகவும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஸ்ரீநகருக்கு சென்றனர். ஆனால், அவர்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். “சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு வருகை தருமாறு ஆளுநர் அழைப்பு விடுவித்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால், எங்களை விமான நிலையத்தில் இருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எங்களு டன் இருந்த செய்தியாளர்கள் தாக்கப்பட்ட னர்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சரியாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது” என இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், “காஷ்மீரின் நிலை தெரியும் என்ப தால், அவர் அடிப்படையற்ற பேச்சுகளை தவிர்ப்பார் என்று நினைத்தே, ராகுல் காந்திக்கு நான் அழைப்பு விடுத்தேன் என் பதை தெளிவாக சொல்ல நினைக்கிறேன்”  ”ஆனால், என் அழைப்பை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்துவிட்டார். அவரோடு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலரை யும் அவர் கூட்டி வந்தார். அதுமட்டுமல்லாது, தடுத்து வைக்கப்பட்ட அரசியல் தலைவர் களையும், ஊடகங்களையும் சந்திக்கப் போவதாக கூறினார். இப்படியான அரசியல் விளையாட்டை அவர் விளையாடியதால், நான் அழைப்பை திரும்பிப் பெற்றுக் கொண்டேன்.”

”இனி ராகுல் காந்தி காஷ்மீரை பார்வையிட வர முடியுமா முடியாதா என்பதை நிர்வாகம்தான் முடிவு செய்யும்.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் நிலையில், அதனை  குலைக் கும் வகையில் எந்த அரசியல்வாதியும் வந்து செயல்படக்கூடாது என்பதை நிர்வாகம் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறது.” ”அமைதியை நிலைநாட்ட நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தவே ராகுல் காந்தி முயற்சித்தார். நாங்கள் அதை அனுமதிக்கவில்லை என்பதால், டெல்லிக்கு திரும்ப சென்றபோது, காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை ஊடகங்களிடம் தெரிவித்தார். அப்படி அவர் பேசுவது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் பயன்படுத்தப்படு கிறது. ஜம்மு-காஷ்மீரில் நிலைமை ஆரோக்கியமான சூழல் இல்லை. இந்த விவகாரம் தேசிய நலன் சார்ந்தது. ராகுல் காந்தியின் பேச்சு தேசிய நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. அவரது மோசமான அரசியல் விளையாட்டை விளையாடாமல், தேசிய நலனே முக்கியம் என்று ராகுல் காந்தி கருத வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என அந்த அறிக்கையில் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

;